அச்சச்சோ.. என்னாச்சு.. சுச்சிய இப்படி தனியா புலம்ப விட்டாங்களே.. ரன்னிங் கமெண்ட்ரி மாதிரி இல்லயே!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெட்ரூமில் தனியாக படுத்திருந்த சுச்சி பிக்பாஸிடம் புலம்பி தீர்த்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்டு கார்டாக என்ட்ரி கொடுத்தவர் சுச்சித்ரா. வந்த வேகத்தில் படு ஸ்பீடாக இருந்த சுச்சி, அடுத்த ஓரிரு நாளிலே வந்த வேலையை மறந்துவிட்டார்.

பாலாஜியை தவிர வேறு யாருடனும் ஒட்டாத சுச்சி, எப்போதும் அவருக்கு ஆதரவாய் பேசுது, சொம்பு தூக்குவது, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என இருந்து வருகிறார்.

நாமினேஷனில் டாப்

நாமினேஷனில் டாப்

இந்த வார நாமினேஷனில் அதிக ஒட்டுக்களை பெற்று நாமினேஷனில் டாப்பில் உள்ளார் சுச்சி. அவரை நாமினேட் செய்த அனைவருமே அவர் எந்த நேரத்தில் எப்படி இருக்கிறார் என்றே சொல்ல முடியவில்லை. பல பிரச்சனைகளை கிரியேட் செய்கிறார் என குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

செம என்டெர்டெய்ன்மென்ட்

செம என்டெர்டெய்ன்மென்ட்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பெட்ரூமில் தனியாக இருந்தார் சுச்சி. அப்போது, பிக்பாஸ் இந்த வீட்டை விட்டு போக எனக்கு விருப்பம் இல்லை. செம என்டெர்டெய்ன்மென்ட்டாக இருக்கிறது என்றார்.

டான்ஸ் வேறலெவல்

டான்ஸ் வேறலெவல்

தொடர்ந்து ரிவெர்ஸ் டாஸ்க்கின் போது ஹாலில் மற்ற ஹவுஸ்மெட்ஸுகள் செய்த அலப்பறைகளை எல்லாம் பார்த்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தார். சனம், ஷிவானி ஆகியோர் டான்ஸ் ஆடியதை பார்த்த சுச்சி, டான்ஸ் வேற லெவல்.. வாட் எ ஸ்டெப் என கிண்டலடித்தார்.

தானாக சிரித்து..

தானாக சிரித்து..

பாலாஜி சோஃபாவில் படுத்துக்கொண்டு ஜூஸ் குடித்துக் கொண்டிருந்ததை பார்த்த சுச்சி, அவரை கலாய்த்து நான் ஸ்டாப்பாக சிரத்துக் கொண்டிருந்தார். எதற்கு சிரிக்கிறார். என்ன காரணத்திற்காக சிரிக்கிறார் என்று சொல்லாமலேயே சிரித்தார்.

திடீரென கோபம்

திடீரென கோபம்

திடிரென கோபமாக பேச ஆரம்பித்துவிட்டார் சுச்சி. தான் வீட்டை க்ளீன் செய்ய ஆரம்பித்த உடன் பண்ணக்கூடாது பண்ணக்கூடாது என சனம் கூறுகிறார். இவங்கள்லாம் என்ன பெறுக்குறாங்க, சினிமாவுல காட்றமாதிரி பெருக்குன இடத்தையே பெருக்கிட்டு இருக்காங்க.

ஓபி அடிக்கிறேன்..

ஓபி அடிக்கிறேன்..

நான் இப்படி கிளீன் பண்ணும் போதும், ஆஜித் வந்து வந்து தப்பு கண்டுபிடிக்கிறான். சம்யுக்தா நான் வேலையே செய்யவில்லை என ஏத்தி விடுகிறார். என்னை ஓபி அடிக்கிறேன் ஓபி மேக்ஸ் என்கிறார். டஸ்ட் க்ளீன் பண்ணா சனம் பண்ணக்கூடாது என்கிறார்.

ஜித்தன் ரமேஷ்

ஜித்தன் ரமேஷ்

கேட்டால் தங்களையும் அப்படி க்ளீன் பண்ண சொல்வார்கள் என்று கூறுகிறார். பெருக்குற மாதிரி ஷோ காட்றாங்க.. அடுத்து அவர்(ஜித்தன்) வருகிறார். பேக்லேயே நடந்து வருகிறார். இருக்குற இடமே தெரியாது. படுக்கப்போகிறார், படுத்துட்டார் என்று ஜித்தன் ரமேஷை பங்கம் செய்தார்.

ஒழுங்கு காட்டிய சுச்சி

ஒழுங்கு காட்டிய சுச்சி

தொடர்ந்து ரிவர்ஸ் டாஸ்க் எப்போ முடிய போகுது என்று அர்ச்சனா கேட்க அவரையும் படு பங்கம் செய்தார். அவர் பேசிய அன்பாலேயே உங்களை அணைப்போம்.. வி லவ் யூ சோ ஸ்வீட் என்றதை ஒழுங்கு காட்டியப்படி நக்கலடித்தார்.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
புலம்ப விட்டாங்களே

புலம்ப விட்டாங்களே

தொடர்ந்து சோம் நேராக நடந்து வந்ததை பார்த்த சுச்சி, என்ன குக்கு பிரண்ட்ல நடந்து வருது என்று அவரையும் கலாய்த்தார். சச்சி கொடுத்த ரன்னிங் கமெண்ட்ரியில் ஆவேசம் , ஆக்ரோஷம், நக்கல், கோபம், சிரிப்பு என மொத்தமும் இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் சுச்சியை இப்படி புலம்ப விட்டாங்களே என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X