அவரதான் அம்மா சென்டிமெண்ட்ல பூட்டிட்டிங்களே.. எப்படி எதிரா விளையாடுவார்? அர்ச்சனாவை கிழித்த சுச்சி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அம்மா சென்டிமெண்ட் காட்டிய அர்ச்சனாவை கிழித்து தொங்கவிட்டார் சுச்சி.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. வந்த வேகத்தில் வேலையை ஆரம்பித்துவிட்டார் சுச்சி.

பலருக்கும் ஐடியா, அட்வைஸ் என பிக்பாஸ் வீட்டை ரணகளப்படுத்த தொடங்கியிருக்கிறார். குறிப்பாக அர்ச்சனாவை நேருக்கு நேராக பல கேள்விகளை கேட்டு கிழித்து விட்டார்.

 கார்னர் செய்த அர்ச்சனா

கார்னர் செய்த அர்ச்சனா

கடந்த வாரம் தூங்கிக் கொண்டிருந்த பாலாஜியை எழுப்பி ஹவுஸ் கீப்பிங் சேய்ய சொல்லுமாறு வேல்முருகனை உசுப்பி விட்டார் அர்ச்சனா. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் குளிர்காய்ந்த அர்ச்சனா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலாஜியை கார்னர் செய்தார்.

 கண்ணீர்விட்ட பாலாஜி

கண்ணீர்விட்ட பாலாஜி

ரியோ, நிஷா, வேல்முருகன் என பலரும் அவரை கேள்வி கணைகளால் துளைத்தெடுத்தனர். இதனால் கார்டன் ஏரியாவில் கண்ணீர் விட்டு அழுதார் பாலாஜி. அப்போது அர்ச்சனா, ரியோ, சோம் ஆகியோர் பாலாஜியை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

 நீ வேணும்டா எனக்கு

நீ வேணும்டா எனக்கு

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அர்ச்சனா, நான் உனக்கு அம்மாடா, நீ எனக்கு குழந்தையா வேணும்டா என்று கண்ணீர்விட்டார். அதனை கேட்ட பாலாஜியும் கண்ணீர்விட்டு அழுது அர்ச்சனாவை கட்டியணைத்துக் கொண்டார்.

 கிழித்த சுச்சி

கிழித்த சுச்சி

இவ்வளவு பெரிய சண்டை நடந்த நிலையில் எப்படி இந்த திடீர் மாற்றம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியான சுச்சி அதே விவகாரத்தை கையில் எடுத்து அர்ச்சனாவை டார் டாராய் கிழித்து விட்டுள்ளார்.

 வாயை மூட வச்சுடுறீங்க

வாயை மூட வச்சுடுறீங்க

அதாவது தனக்கு வழங்கப்பட்ட ஈமோஜி குறித்து சுச்சியிடம் டவுட் கேட்டார் அர்ச்சனா. அதற்கு பதில் சொன்ன சுச்சி, மற்றவர்கள் ஏதாவது சொல்ல வந்தார் அவர்களை பேச விடாமல் வாயை மூட வச்சுடுறீங்க. அன்னைக்கு அப்படி சண்டை நடந்தது.

 அடுத்த 2 நிமிஷத்துல மாற்றம்

அடுத்த 2 நிமிஷத்துல மாற்றம்

பாலாஜி வெளியே உட்காந்து ஃபீல் பண்ணிட்டு இருக்காரு, நீங்கள்லாம் உள்ளே அவர் இப்படி இருப்பார் அப்படி இருப்பார் என காமெடி பண்ணீங்க. அடுத்த 2 நிமிஷத்துல அம்மாடா, நீ என் குழந்தைடா, நீ எனக்கு வேணும்டா என்று மாறிவிட்டீர்கள்.

 பாலாவை பூட்டிட்டிங்க

பாலாவை பூட்டிட்டிங்க

அவர் உங்களுக்கு எதிராய் இருக்கக்கூடாது என அம்மா சென்டிமெண்ட போட்டு பாலாவை பூட்டிட்டிங்க. அவர கூடவே வச்சுக்கிட்டிங்க. இனிமே எப்படி அவர் உங்களுக்கு எதிரா விளையாடுவார் என பட்டென பொட்டில் அடித்தது போல் கேட்டார் சுச்சி.

 நான் அன்பை நம்புறேன்

நான் அன்பை நம்புறேன்

உடனே கோபப்பட்ட அர்ச்சனா, பாலா இனிமே என்னை நீ அம்மாவா பார்க்காதே, போட்டியாளரை பார். இவங்க இப்படி சொல்றாங்க. கமல் ஸ்ரேட்டர்ஜியாக பார்க்க சொல்றாங்க. நான் அன்பை நம்புறேன்.

 பாலாவுக்கு அட்வைஸ்

பாலாவுக்கு அட்வைஸ்

நான் என் அன்பை கொடுத்துக்கிட்டே இருக்கேன். நீ என்னை காலி பண்றதுன்னா பண்ணிக்கிட்டே இரு.. நான் போய்க்கிட்டே இருக்கேன் என்று கூறுகிறார் அர்ச்சனா. இதனைக் கேட்ட சுச்சி, நான் உங்களை மாற சொல்லவில்லை, நீங்கள் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டுவிட்டு பாலாவுக்கு அட்வைஸ் செய்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X