பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பாடகி சுசித்ரா.. இந்தியளவில் டிரெண்டான #Suchi

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பாடகி சுசித்ரா வெளியேற்றப்பட்ட நிலையில், #Suchi என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டானது.

பாடகி சுசித்ராவை இவ்வளவு சீக்கிரமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து திட்டமிட்டே வெளியேற்றியதாக ஏகப்பட்ட புகார்களும், சுசித்ரா ஹவுஸ்மேட்கள் பற்றி சொன்ன ஒவ்வொரு விஷயமும் உண்மைதான் என அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நேற்று வரை, சுசித்ராவை திட்டி வந்தவர்கள் கூட, இன்று அவருக்கு ஆதரவாக பேசி வருவது வரவேற்கத்தக்கது.

ட்ரோல்களை கண்டுக்காதீங்க

சமூக வலைதளங்களில் நல்லது செஞ்சாலும், கெட்டது செஞ்சாலும் ஒவ்வொரு விதமாக ட்ரோல்களும் பாராட்டுக்களும் பறக்கத்தான் செய்யும். நீங்க அதையெல்லாம் கண்டு பயப்பட வேண்டாம். சீக்கிரமே உங்கள் உடல்நிலையை சரி செய்து கொண்டு, மீண்டும் பாடகியாக தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் சுச்சியை பாராட்டி வருகின்றனர்.

தாய் கிழவி

சுசித்ரா வெளியேற வேண்டும் என்பதில் குறியாக இருந்த அர்ச்சனா மற்றும் நிஷா, அவர் வெளியேறும் போது கூட அவருக்கு ஒரு பாய் கூட சொல்லாமல், எப்படி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும், தாய் கிழவி அர்ச்சனா மற்றும் அவரது அடிமை நிஷா சுச்சி செல்வதை சந்தோஷமாக பார்த்து ரசிக்கின்றனர் என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சுச்சி பாராட்டிய இருவர்

ரம்யா பாண்டியன் ரொம்பவே தெளிவு, இருக்கிறதுலயே ரொம்ப அமைதியானவர் என சுசித்ரா பாராட்டினார். சுரேஷ் சக்கரவர்த்தி போகும் போது, ரம்யாவை விஷம் என்றார். அதே போல ஆரியை பாராட்டிய சுச்சி, அவர் ஒரு நேர்மை ரேடார் என்கிற புதிய பட்டத்தையும் கொடுத்து விட்டுச் சென்றார். அனிதாவுக்கு கொடுத்த உண்மை ரேடாருக்கே இன்னும் அர்த்தம் தெரியல.

குணமடைய பிரார்த்தனை

உடல் நலக் குறைவாக சுச்சி காணப்படுகிறார் என்றும், அவர் சீக்கிரமே குணமடைந்து, பழையபடி பாடல்களை தமிழ் சினிமாவில் பாட வேண்டும் என்றும், அவருக்கு சினிமா பாடல் வாய்ப்புகள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கிடைக்கும் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் எதிர்பார்த்து, பாசிட்டிவ் கமெண்ட்டுகளாக போட்டு வருகின்றனர்.

நாலு பேருக்கு நன்றி

சுசித்ராவை எவிக்‌ஷனுக்கு நாமினேட் பண்ணாதவர்கள் இந்த நான்கு பேர் தான். சுசித்ரா வெளியேறும் போதும் அவருடன் இருந்து அவரை வழியனுப்பி வைத்தனர். மத்த 9 பேரும், சம்யுக்தா சேவ் ஆனதை கொண்டாடி கொண்டு இருந்தார்கள் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் குறிப்பிட்டு குற்றம் சாட்டி வருகின்றனர். 4 பேருக்கு நன்றி!

சுச்சி சொன்ன விமர்சனங்கள் சரியா?

சுச்சி சொன்ன விமர்சனங்கள் சரியா?

சுச்சி வீட்டில் இத்தனை நாட்கள் பண்ண அலம்பலை எல்லாம் கலாய்த்துத் தள்ளி விட்டு, அவருக்கு அதிக ஓட்டுக்களை போடாமல் அவுட்டாக்கி வெளியே அனுப்பி விட்டு, நீதிபதியாக சுச்சி நடந்து கொண்டதை விமர்சித்து விட்டு, இப்போ உடனே சுச்சி சொல்லிட்டாங்க என அர்ச்சனா மற்றும் நிஷா மீது பாய்வது சரியான விமர்சனமா? என்கிற கேள்வியையும் சில பிக்பாஸ் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஈடுபாடு இல்லை

ஈடுபாடு இல்லை

எந்த ஒரு டாஸ்க்கிலும் பங்கேற்க சுச்சியால் முடியவில்லை. ஏதோ நிகழ்ச்சிக்கு வந்து சிக்கிக் கொண்டேமே என்றே தான் அவர் இருந்தார். கடைசி வரை விளையாடவே இல்லை. பாலாவுக்கு மட்டுமே சிங் சாங் போட்டார். பாலாவுக்கு கூட சுச்சியை பிடிக்காமல் தான் உன் கூட என்னை கோர்த்து விட்டு சாகடிக்கிறாங்க என கத்தினார். அதை எல்லாம் விட்டு விட்டு சுச்சிக்கு நல்லா செண்ட் ஆஃப் கொடுக்கிறேன்னு சீன் போடுறீங்களே எனவும் இன்னொரு தரப்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X