நான்தான் சிடுமூஞ்சு மேக்ஸ்.. வாங்கப்போறேன் டேக்ஸ்.. பாட்டு எழுதி பட்டைய கிளப்பிய சுச்சி!
சென்னை: சிடு மூஞ்சு மேக்ஸ் என்ற வார்த்தையை வைத்து பாட்டு எழுதி பட்டைய கிளப்பினார் சுச்சி.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அனிதாவை நாமினேட் செய்த சம்யுக்தா அவரை சிடுமூஞ்சு மேக்ஸ் என காரணம் கூறினார்.
அதனை கேட்ட சுச்சி, அதையே சொல்லி சொல்லி பார்த்தார். பின்னர் அந்த வார்த்தையை வைத்து பாடல் எழுதப்போவதாக கூறினார்.

ஷிவானியின் கைகளை பிடித்து
அதுவரை ஷிவானியின் கைகளை பிடித்தவிளையாடிக் கொண்டிருந்தார் பாலாஜி. சுச்சி வந்து பாட்டு எழுதப்போவதாக கூறிய பின்னர் அவருடன் சேர்ந்து நான் வார்த்தைகளை சொல்கிறேன் நீ நோட் பண்ணிக்கோ என்றார்.

அப்செட்டான ஷிவானி
இதனால் அப்செட்டான ஷிவானி எழுந்து வெளியே சென்று விட்டார். ஆனால் அதை பெரிதாக கண்டுகொள்ளாத பாலாஜி சுச்சியுடன் சேர்ந்து பாடல் எழுதுவதில் பிஸியாக இருந்தார்.

சிடு மூஞ்சு மேக்ஸ்
தொடர்ந்து இருவரும் டிஸ்கஸ் செய்து ஒருவழியாக பாடல் எழுதி முடித்தனர். பின்னர் அந்த பாடலை பாடினார் பாலாஜி. சிடு முஞ்சு மேக்ஸ் என்பது சுச்சிக்கு ஹர்ட்டானதால் அவர் அதை வைத்து பாட்டு எழுதியுள்ளார் என்றார்.

வாங்கப்போறேன் டேக்ஸ்
அதற்கு அப்படியெல்லாம் இல்லை என்று கூறினார் சுச்சி. தொடர்ந்து சுச்சி எழுதிய பாடலை பாடினார். நான்தான் சிடு மூஞ்சு மேக்ஸ், வாங்கப்போறேன் டேக்ஸ்.. இட் வில் பி இன் லேக்ஸ்.. எமோஷன்ஸ் எல்லாம் ஃபேக்ஸ்.. என ரைமிங்காக சாக்ஸ், ஸ்னேக்ஸ், தேங்க்ஸ் என்று வார்த்தைகளை போட்டு எழுதியிருந்தார்.


Click it and Unblock the Notifications











