அட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி

By Siva

Recommended Video

சுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வீடியோ

சென்னை: தன்னை பற்றி பாடகி சுசித்ரா கூறியதில் உண்மை இல்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் கோலிவுட்டில் கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார் பாடகி சின்மயி. அவர் ஆதாரம் இல்லாமல் விளம்பரம் தேட பொய் புகார் தெரிவிப்பதாக சிலர் விமர்சித்தனர்.

நெட்டிசன்களோ பாடகி சுசித்ரா சுசி லீக்ஸின் ஒரு பகுதியாக சின்மயி குறித்து தெரிவித்ததை தேடிக் கண்டுபிடித்தனர்.

அபார்ஷன்

அபார்ஷன்

2016ம் ஆண்டில் பாடகி சின்மயி 4 முறை கருவை கலைத்ததாக சுசித்ரா ட்வீட்டி இருந்தார். சின்மயி அட்ஜஸ்ட் செய்து வாய்ப்புகள் பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சின்மயி குறித்து சுசித்ராவின் ட்வீட்டுகளை மற்றும் வீடியோவை தேடிக் கண்டுபிடித்த நெட்டிசன்கள் முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டனர்.

சின்மயி

சின்மயி

நெட்டிசன்கள் தன்னை தொடர்ந்து கேவலமாக விமர்சித்ததை பார்த்த சின்மயி சுசிலீக்ஸ் பற்றிய உண்மையை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவு செய்து ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் 4 முறை கருகலைப்பு எல்லாம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் சின்மயி.

மனநலம்

சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை பற்றி தவறாக பேசினார். அதில் உண்மை இல்லை. அதற்காக அவர் இமெயில் மூலம் மன்னிப்பு கேட்டார். அந்த இமெயிலை பப்ளிக்காக வெளியிட வேண்டும் என்று தோன்றவில்லை. இன்று சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் ஒரு ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளார். சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லாதபோது அவர் சின்மயி மீது புகார் தெரிவித்தார் என்று கார்த்திக் ட்வீட்டியுள்ளார் என்கிறார் சின்மயி.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

பட வாய்ப்பு பெற தான் எந்த அட்ஜஸ்மென்ட்டும் செய்யவில்லை என்கிறார் சின்மயி. இதற்கிடையே சின்மயி தன்னை பற்றி கூறியதில் உண்மை இல்லை என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு உண்மையை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் சின்மயி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X