வலிக்குது, வாழ விடுங்கள்: ட்விட்டர், ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறிய தனுஷின் அக்கா #SuchiLeaks

By Siva

சென்னை: சுசிலீக்ஸால் மனம் நொந்து போய் தனுஷின் அக்காவும், பல் மருத்துவருமான விமல கீதா ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா தனுஷ் சில நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் வெளியிடப் போவதாக வேறு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தனுஷின் அக்காவும், பல் மருத்துவருமான விமல கீதா சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

குடும்பம்

குடும்பம்

பல்வேறு விஷயங்களால் கடந்த சில மாதங்களாக எங்கள் குடும்பம் நொந்துபோயுள்ளது. இருப்பினும் நாங்கள் அனைவரும் அமைதியாக உள்ளோம்.

ஏழை

ஏழை

நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரேயொரு நபர் தனது கடின உழைப்பு, தியாகத்தால் எங்களுக்கு உணவு, கல்வி அளித்ததால் இன்று நாங்கள் நன்றாக உள்ளோம்.

தேனி

தேனி

தேனியில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்து இந்த அளவுக்கு ஆகியிருக்கிறோம். இது ஒரு நாள் இரவில் நடக்கவில்லை. இந்த நிலைமையை அடைய என் சகோதரர்கள் கடும் விமர்சன்ஙகள், அவமானங்களை சந்தித்துள்ளனர்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் இன்று பெரிய நடிகர். அது அவரின் கடின உழைப்பால் சாத்தியமானது. ட்விட்டரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் போஸ்ட் பண்ணலாம் என்றாகிவிட்டது. 12 வயது சிறுவர்கள் கூட கணக்கு வைத்துள்ள ட்விட்டரில் சில ஆபாச வீடியோக்களை வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது.

வீடியோக்கள்

வீடியோக்கள்

இதில் மோசமான விஷயம் என்னவென்றால் சிலர் அந்த ஆபாச வீடியோக்களை இன்னும் போஸ்ட் பண்ணுமாறு கேட்பது தான். எங்கள் குடும்பம் நிறைய பார்த்துவிட்டது. எது நடந்தாலும் ஒன்றாக இருந்து போராடுவோம்.

ட்விட்டர்

ட்விட்டர்

மிகுந்த வலி மற்றும் மன வருத்தத்துடன் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இருந்து சில காலம் வெளியேறுகிறேன். யாரையும் பார்க்கவோ, பேசவோ முடியாத நிலையில் உள்ளேன். இதை யார் செய்தாலும் நிறுத்திக் கொல்லுங்கள். யாராவது உயிரை மாய்க்கும் அளவுக்கு சென்றுவிட்டால் அவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வர முடியாது. தயவு செய்து வாழுங்கள், வாழ விடுங்கள். கடவுள் ஆசிர்வதிப்பாராக, குட்பை என விமல கீதா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X