»   »  கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா!

கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன் கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்யப் போவதாக மீடியாக்களிடம் தெரிவித்து வருகிறார் பாடகி சுசித்ரா.

கடந்த ஒரு வாரமாக சமூக வலைத் தளங்களில் பரபரப்பான, சந்தேகமான நபராக வலம் வருகிறார் சுசித்ரா. இவரும் தனுஷ் அன்ட் கோவும் ஏதோ ஒரு நள்ளிரவுப் பார்ட்டியில் மோதிக் கொள்ள, அதை சுசித்ரா ட்விட்டரில் பகிர, அப்போது கிளம்பிய பரபரப்பு இன்னும் ஓயவில்லை.

Suchithra to divorce husband Karthik

என்னதான் நடந்தது என அடுத்தடுத்து மீடியாக்காரர்கள் சுசித்ராவைத் தொடர்பு கொண்டனர்.

அப்போது, தன்னுடைய ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து, தவறான படங்கள் செய்திகளைப் பரப்பிவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும் நள்ளிரவுப் பார்ட்டிகளுக்குச் செல்லும் பழக்கமே தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ள சுசித்ரா, விரைவில் கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்யப் போவதாகக் கூறினார். பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கார்த்திக்கிடம் விசாரித்தபோது, "சித்ரா மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளார். அதனால் சுசித்ராவின் நிலையை முழுவதுமாகப் புரிந்து பிரச்னையைச் சரிசெய்ய குடும்ப உறுப்பினர்கள் முயற்சி செய்துவருகிறோம்," என்றார்.

English summary
Singer Suchithra says that she would divorce her husband actor Karthik Kumar soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil