முதல் நாளே ஆட்டத்தை தொடங்கிய சுச்சி.. அர்ச்சனா ஸ்டைலில் பட்டம் கொடுத்து.. அசிங்கப்படுத்தி அதகளம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கி இன்றுடன் 28 நாட்களை கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் ஆளாய் நடிகை ரேகா எவிக்ட்டானார்.

கடந்த வாரம் ஆஜித் எவிக்ட்டான நிலையில் அவரிடம் இருந்த ஃபிரி எவிக்ஷன் பாஸை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டிலேயே தொடர்ந்தார்.

வைல்ட் கார்ட்

வைல்ட் கார்ட்

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து, ஒரு போட்டியாளர் வெளியேற உள்ளார். அதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், மேலும் ஒரு வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

மூன்றாவது புரமோ

மூன்றாவது புரமோ

சுசித்ராவின் என்ட்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் தெரியவந்தது. இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

காயம்பட்ட கமாண்டோ

காயம்பட்ட கமாண்டோ

அதில் அர்ச்சனா ஸ்டைலில் ஹவுஸ்மேட்டுகளுக்கு ஈமோஜி டிசைனில் பட்டம் கொடுத்துள்ளார். அதன்படி முதலில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு பட்டம் கொடுக்கும் சுசித்ரா, காயம்பட்ட கமாண்டோ போன்று இருக்கிறீர்கள் என கூறி பட்டம் கொடுக்கிறார்.

ஷிவானியை அசிங்கப்படுத்திய சுச்சி

ஷிவானியை அசிங்கப்படுத்திய சுச்சி

அடுத்து ரியோவுக்கு ஒரு ஈமோஜியை கொடுக்கும் சுச்சி, அவர் என்ன தேடல்ல இருக்காருன்னு எனக்கு தெரியல என்கிறார். தொடர்ந்து ஷிவானிக்கு ஈமோஜியை கொடுக்கும் சுச்சி, ஆர்க்யூமென்ட்டுக்கு பதிலே தெரியலைன்னா ஷிவானி என காரணம் கூறுகிறார்.

இனிமேதான் கச்சேரி

இனிமேதான் கச்சேரி

அர்ச்சனாவுக்கும் ஒரு ஈமோஜியை கொடுக்கும் சுச்சி, மற்றவர்களை பேசவே விடுவதேயில்லை என கூறுகிறார். இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ இதனை பார்த்த நெட்டிசன்கள், ஆரம்பமே அசத்தலாக உள்ளது, இனிமேதான் இருக்கு கச்சேரி என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X