இப்படி விளையாடுங்க.. சுரேஷுக்கும் ரியோவுக்கும் ஐடியா கொடுத்த சுச்சி.. கடைசியில பேக்ஃபயர் ஆயிடுச்சு!

சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரியோவுக்கு எப்படி விளையாட வேண்டும் என ஐடியா கொடுத்தார் சுச்சி.

சுச்சி லீக்ஸ் புகழ் சுசித்ரா ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார்.

வந்த வேகத்தில் யார் யார் எப்படி விளையாடுகிறார்கள் என ஒவ்வொரு ஈமோஜியை கொடுத்தார்.

சரண்டரான ரியோ

சரண்டரான ரியோ

இதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஈமோஜிகள் குறித்து சுச்சியிடம் டவுட் கேட்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் முதல் நபராய் ரியோ, கார்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கும் சுச்சியிடம் நீங்கள் முழுக்க ஆங்கிலத்தில் சொன்னதால் எனக்கு புரியவில்லை என்றார்.

நம்பும் ஹவுஸ்மேட்ஸ்

நம்பும் ஹவுஸ்மேட்ஸ்

மேலும் நான் என்ன செய்ய வேண்டும் எப்படி விளையாட வேண்டும் என தெளிவாக சொல்லுங்கள் என்றும் கேட்டார் ரியோ. அதற்கு பதில் சொன்ன சுச்சி, சில சம்பவங்களை எடுத்துக் கூறி நீங்க என்ன செய்தாலும் ஒரு அர்த்தம் இருக்கும் என ஹவுஸ் மேட்ஸ் நம்புகிறார்கள்.

தனியாக இருக்க விடுங்கள்

தனியாக இருக்க விடுங்கள்

அதனால் நீங்கள் தனியாகவே முடிவு எடுக்கலாம். எல்லோருடைய பிரச்சனையிலையும் தலையிட்டு முடிவு சொல்லுங்கள். நீங்கள் இப்போது இருப்பது போன்றே இருங்கள். எல்லாரையும் கவனியுங்கள், உங்களை சார்ந்து இருப்பவர்களை தனியாக இருக்கவிடுங்கள் என்றார்.

அடங்கி போய்விடுகிறீர்கள்

அடங்கி போய்விடுகிறீர்கள்

தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியிடம் பேசிய சுசித்ரா, கன்ஃபெஷன் ரூமிற்கு போய் வந்த பிறகு நீங்கள் மறுபிறவி எடுத்துள்ளீர்கள். அப்போது ஹர்ட்டானது தொடருகிறது.
யாராவது தட்டிட்டா நீங்கள் அடங்கி போய்விடுகிறீர்கள் என்று கூறினார் அர்ச்சனா.

குரூப்பிஸம் உடைகிறது

குரூப்பிஸம் உடைகிறது

அதற்கு அர்ச்சனா வந்த பிறகு வேறு மாதிரியாகிவிட்டது. நான் வேற ஸ்ட்ரேட்டர்ஜியை எடுத்துள்ளேன். எல்லாவற்றையும் பின்னால் இருந்து பார்க்கிறேன்.
இதனால் அவர்களுக்குள் உள்ள குரூப்பிஸம் உடைகிறது என்றார் சுரேஷ்.

காயம்பட்ட கமாண்டோ

காயம்பட்ட கமாண்டோ

அதனைக் கேட்ட சுச்சி வெரி குட் என அவருக்கு ஹைஃபை கொடுத்தார். நேற்று முன்தினம் சுரேஷ் சக்கரவர்த்திக்கு, தலையில் பேண்டேஜ் ஒட்டிய ஈமோஜிகளை கொடுத்து நீங்கள் காயம்பட்ட கமாண்டோ போல் ஆகிவிட்டீர்கள் என்றார்.

பேக் ஃபயர்

பேக் ஃபயர்

நேற்றைய எபிசோடில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அவ்ளோ அட்வைஸ் கொடுத்த போதும் கடைசியில் இருவருக்கும் நான் சிங்காகிவிட்டது. சுச்சி சொன்னது அவருக்கே பேக் ஃபயராகிவிட்டது. கடைசியில் சுச்சி சுரேஷை நாமினேட் செய்யும் அளவுக்கு சென்றுவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X