twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் என்ன செய்தேன் என்பது எனக்கு தெரியும்.. மனநிலை பாதிப்பு குறித்து மனம் திறந்த சுச்சி!

    |

    சென்னை: நான் என்ன செய்தேன் என்பது எனக்கு தெரியும் என கூறியுள்ள பாடகி சுசித்ரா, மனநிலை பாதிப்பில் உள்ளவர்களுக்கு உதவ விரும்புவதாக கூறியுள்ளார்.

    ஆர்ஜே, பாடகி, தொகுப்பாளினி என பல்வேறு முகங்களை கொண்டவர் சுசித்ரா. இவரது டிவிட்டர் கணக்கில் இருந்து கடந்த கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியானது.

    இதனால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் சுசித்ரா. இதனை தொடர்ந்து தனது கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாக கூறினார்.

    பவித்ரா முதல் ரெமோ வரை.. தாயுள்ளம் கொண்ட செவிலியர்களை கொண்டாடிய தமிழ் சினிமா #உலகசெவிலியர்தினம்பவித்ரா முதல் ரெமோ வரை.. தாயுள்ளம் கொண்ட செவிலியர்களை கொண்டாடிய தமிழ் சினிமா #உலகசெவிலியர்தினம்

    பேக் டூ ஃபார்ம்

    பேக் டூ ஃபார்ம்

    அவரது அப்போதைய கணவரான நடிகர் காத்திக்குமார், சுச்சிக்கு மனநிலை சரியில்லை என கூறி வீடியோ வெளியிட்டார். இதனை தொடர்ந்து நண்பர்களால் ஒதுக்கப்பட்ட சுசித்ரா தற்போது மீண்டும் பேக் டூ ஃபார்ம் ஆகியிருக்கிறார்.

    யாரோ ஒரு பெரிய கை

    யாரோ ஒரு பெரிய கை

    தனியாக யூட்யூப் சேனலில் சமையல் நிகழ்ச்சியை நடத்தி வரும் சுசித்ரா அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சுச்சி, அந்த வீடியோக்கள் எப்படி வெளியானது என்று எனக்கு தெரியவில்லை. அதற்கு பின்னால் யாரோ ஒரு பெரிய கை உள்ளது என்ற கூறியிருந்தார்.

    எனக்கு தெரியும்

    எனக்கு தெரியும்

    இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சுசித்ரா, மனநிலை பாதிப்பு குறித்து பேசியிருக்கிறார். தான் மனநிலை பாதிக்கப்பட்டு எப்படி கடந்து வந்தேன் என்பது எனக்கு தெரியும். ஆகையால் மனநிலை பாதிப்பு மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் என்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தால் அவர்களிடம் நாள் முழுக்க பேச நான் தயாராக இருக்கிறேன்.

    உதவ விரும்புகிறேன்

    உதவ விரும்புகிறேன்

    நான் என்ன செய்தேன் என்பது எனக்கு தெரியும். அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். லாக்டவுன் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசுவதன் மூலம் எனது பங்கை செய்கிறேன்.

    தற்கொலை முயற்சி

    தற்கொலை முயற்சி

    எப்படியிருந்தாலும் அதைப் பற்றி பேசுவது முக்கியம், அல்லது அந்த உண்மையை தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எந்தவொரு நிலையையும் பற்றி பேசுவது முக்கியம் என்று கூறியிருக்கிறார் சுச்சி. சுச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Suchithra wants to help people who has mental health issue. She says that she knows what she went.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X