Bigg Boss 8: கார்த்திக் குமாருக்கு விஜய் சேதுபதியை பிடிக்காதே.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், விஜய் சேதுபதி தான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை நயன்தாராவிடமும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

உலகளவில் பிக் பிரதர் என்கிற பெயரில் பிரபலமான நிகழ்ச்சி இந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியாக இந்தியில் ஆரம்பிக்கப்பட்டு சல்மான் கான் அதனை தொகுத்து வழங்கி வருகிறார். 17 சீசன்களை அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்து அடுத்து 18வது சீசனே ஆரம்பிக்கவுள்ளது.

Bigg Boss Tamil 8 Suchitra Karthik Kumar

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த முறை தொகுத்து வழங்கப்போவதில்லை என அறிவித்து விட்டார்.

சிம்புவும் பிஸி: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு பிரம்மாண்டமாக நடிக்கவுள்ள 48வது படத்தை கமல் தயாரிப்பதாக அறிவித்தார். ஆனால், படத்தின் பட்ஜெட் மற்றும் சிம்புவின் மார்க்கெட் லாபத்தைக் கொடுக்குமா என்கிற சிந்தனையில் அந்த புராஜெக்ட்டை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த நிலையில், சிம்புவே அந்த படத்தை தயாரித்து நடிக்கப் போவதாக கூறுகின்றனர். அதனால், சிம்பு கமலுக்கு பதிலாக ஹோஸ்ட்டாக வரமுடியாது எனக் கூறிவிட்டாராம்.

விஜய் சேதுபதி தான் ஹோஸ்ட்?: விஜய் டிவி நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இதுதொடர்பாக பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏகப்பட்ட ட்ரோல்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக இருந்த கமல்ஹாசனையே விட்டு வைக்காத நிலையில், நயன்தாரா வருவது டவுட் தான் என்றும் விஜய் சேதுபதி தான் கண்டிப்பாக வருவார் என்றும் கூறுகின்றனர்.

கார்த்திக் குமாருக்கு ஆகாதே: விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா? என்றும் கார்த்திக் குமார் வேறு அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க போவதாகவும் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பியுள்ள சுசித்ரா, I Hate Vijay Sethupathi எனக் கூறிய கார்த்திக் குமார் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் எப்படி இடம்பெறுவார் என்கிற கேள்வியை எழுப்பி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் சுசித்ரா வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X