ஒரே வீட்டில் பார்ட்டி.. தனுஷுக்கு சிம்புவை பிடிக்காது.. சுசித்ரா விடாமல் அட்டாக் செய்றாரே
சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா சமீபகாலமாக அளிக்கும் பேட்டியில் பல விஷயங்களை ஓபனாக பேசிவருகிறார். அப்படி பேசும் விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. ரீமா கல்லிங்கல், கமல் ஹாசன், திரிஷா, தனுஷ், கார்த்திக் குமார் என அவர் பல பிரபலங்கள் பற்றி தனக்கு தெரிந்ததாக சில விஷயங்களை தொடர்ந்து கூறிவருகிறார். இந்நிலையில் தனுஷ் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
பின்னணி பாடகி, பத்திரிகையாளர், ஆர்.ஜே, நடிகை என்று பன்முகங்களை கொண்ட சுசித்ரா யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவருகிறார். அவர் கொடுக்கும் பேட்டிகள் பல சர்ச்சைகளை கிளப்பிவருகின்றன. அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் சுசித்ரா மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார். மேலும் நடிகை ரீமா கல்லிங்கலும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ரெட் டாக்கீஸ் என்ற யூட்யூப் சேனலுக்கு சுசித்ரா பேட்டி அளித்தார்.
திருமணம் டூ பிரிவு: தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் வீட்டால் நிச்சயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருக்குமான திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதற்கு முக்கிய காரணம் சுச்சி லீக்ஸ் என்று சொல்லப்படுகிறது.
சுச்சி லீக்ஸ்: கடந்த 2016ஆம் ஆண்டு கோலிவுட்டில் பெரும் புயல் அடித்தது. அதாவது சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வரிசையாக வெளியாகின. தனுஷும், திரிஷாவும் ஒன்றாக இருந்தது, நிக்கி கல்ரானி, அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோரின் அந்தரங்கள் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பின.

மறுத்த சுசித்ரா: அந்த சமயத்தில் சுசித்ராவுக்கு மன நலம் சரியில்லை என்று தகவல்கள் பரவின. அதனையடுத்து அவர் அமைதியாகிவிட்டார்.சில வருடங்கள் கழித்து மீண்டும் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்த அவர்; சுச்சி லீக்ஸுக்கு காரணமே தனுஷ், திரிஷா, கார்த்திக் குமார் ஆகியோர்தான் என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பரபரப்பை கிளப்பினார். அதனையடுத்து அவரது முன்னாள் கணவரான கார்த்திக் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
தொடர் அட்டாக்: இருப்பினும் சுசித்ரா தொடர்ந்து தனுஷ் உள்ளிட்டோரை தொடர்ந்து அட்டாக் செய்துவருகிறார்.அதற்கு தனுஷும் மறைமுகமாக பதிலடி கொடுக்கிறார். சூழல் இப்படி இருக்க ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்; அதுகுறித்தும் காட்டமாக தான் கொடுக்கும் பேட்டிகளில் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
சிம்புவை பிடிக்காது: இந்நிலையில் சுசித்ரா கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "இந்த பிராங்க கலாசாரம் என்ற ஒன்று இருக்கிறது. நடிகர்கள் எல்லாம் சேர்ந்து பார்ட்டி செய்வார்கள். ஒரே வீட்டில் பார்ட்டி செய்துகொண்டிருப்பார்கள். தனுஷ், சிம்பு, விஷால் என அந்தப் பார்ட்டியில் கலந்துகொள்வார்கள். ஆனால் ஒருவரை ஒருவருக்கு பிடிக்காது. தனுஷுக்கு சிம்புவை பிடிக்காது. இருப்பினும் பார்ட்டியில் ஏதோ டிஸ்கஷன் செய்கிறோம் என்று சொல்வார்கள். வெள்ளித்தட்டில் போதை பொருள் வரும் என்று நான் சொன்னதெல்லாம் மிகையில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











