திரிஷா பற்றி மோசமாக பேசிய சுசித்ரா.. தனுஷை விட்டுவிட்டு இப்போ விஜய் பக்கம் திரும்பிட்டாரே?
சென்னை: பாடகி சுசித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனுஷ் பற்றியும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றியும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கார்த்திக் குமார் தொடர்ந்த வழக்கு காரணமாக சுசித்ரா கார்த்திக் குமார் பற்றி பேசக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தான் பேசியதை தப்பு தப்பாக தம்ப் நைல் வைத்து யூடியூப் சேனலில் போட்டு விட்டார்கள் எனக் கூறிய சுசித்ரா இனிமேல் எந்த யூடியூப் சேனலுக்கும் பேட்டியளிக்கப் போவதில்லை என்றார்.
சுசித்ரா விவகாரம் அத்துடன் நின்று விட்டது என ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது தனது யூடியூப் சேனலில் விஜய் மற்றும் திரிஷா பற்றி பேசி பகீர் கிளப்பி உள்ளார் சுசித்ரா.

கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் விஜய் மற்றும் திரிஷா குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது விழாவில் கூட நடிகரும் தவெக தலைவருமான விஜய் சோஷியல் மீடியாவில் பகிரப்படும் வதந்திகள் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
திரிஷா ஒரு பாரசைட்: நடிகை திரிஷா ஒரு பாரசைட் (ஒட்டுண்ணி) என பாடகி சுசித்ரா பகீர் கிளப்பும் விதமாக பேசியுள்ளார். விஜய்யுடன் திரிஷா சொந்தம் கொண்டாடுவதற்கு காரணமே மனைவி சங்கீதாவை பிரிந்து விஜய் தனிமையில் இருப்பது தான் காரணம் என சுசித்ரா பேசியுள்ளார். அரசியலில் வரும் ஆசை திரிஷாவுக்கு உள்ள நிலையில், நடிகர் விஜய்யை அதற்காக அவர் பயன்படுத்த நினைப்பது ரொம்பவே பெரிய தப்பு என்றும் விஜய் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும் என சுசித்ரா கூறியுள்ளார்.
குடும்பத்துடன் விஜய் சேரணும்: விஜய் அரசியல் தலைவராக வேண்டும் என்றால் முதலில் அவர் தனது அப்பா சந்திரசேகர் உடன் சேரவேண்டும். மேலும், மனைவி சங்கீதாவுடன் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும். அப்போது தான் திரிஷா போன்ற பாரசைட் எல்லாம் விஜய்யிடம் நெருங்க மாட்டார்கள். விஜய்யை சிலர் தவறாக இயக்கி வருவதாகவே தெரிகிறது என சுசித்ரா பேசி அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
எம்ஜிஆர் - ஜெயலலிதா: விஜய் மற்றும் திரிஷாவை எம்ஜிஆர் - ஜெயலலிதா போல எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஜெயலலிதாவும் ஒரு பாரசைட் தான். எம்ஜிஆர் வாழ்க்கையில் அவர் வந்ததை கருணாநிதி கூட விரும்பவில்லை என்றும் ஜெயலலிதாவால் சிறப்பான ஆட்சியை ஒருபோதும் வழங்கவே முடியவில்லை என்றும் திரிஷா அதே போல ஆக ஆசைப்படுவது ரொம்ப தவறு. அவர் அதற்கு பதிலாக பாஜகவில் சேரலாம். அழகான நடிகைகள் எல்லாமே பாஜகவில் தான் இணைந்துள்ளார்கள் என சுசித்ரா அடுக்கியுள்ளார்.
திட்டும் தளபதி ரசிகர்கள்: சுசித்ரா இப்படி தனது யூடியூப் சேனலில் விஜய் மற்றும் திரிஷா குறித்து அவதூறு பரப்பும் அளவுக்கு பேசி வருவதை தளபதி விஜய் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். மற்றவர்களை பற்றியே பேசி தான் இனி பிழைப்பை நடத்த வேண்டும் என்கிற முடிவுக்கே சுசித்ரா வந்து விட்டாரா? என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











