சுசித்ரா பேச்சுல வலி தெரியுது.. அந்த நடிகரால் தான் எல்லாம் நாசமா போச்சு.. செய்யாறு பாலு பகீர்!

சென்னை: பல சினிமா பிரபலங்கள் பற்றி வெளிப்படையாக சுசித்ரா எந்தவொரு பயமும் இல்லாமல் பெயரை சொல்லியே அவர்கள் தனது வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக பேசி வரும் நிலையில், சுசித்ராவின் பேச்சில் ஒரு வலி தெரிகிறது என செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார்.

சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டவர் என பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோவில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பேசுவதாக வெளியிட்ட ஆடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Suchitra faces several tough times after Suchi Leaks told by Cheyyaru Balu

அந்த ஆடியோ தன்னுடைய ஆடியோவே இல்லை என்றும் அது முற்றிலும் ஃபேக்கான ஒன்று என கார்த்திக் குமார் வீடியோவையே வெளியிட்டுள்ளார். கார்த்திக் குமார் சொல்வது உண்மையென்றால், பயில்வான் ரங்கநாதன் சொல்வது பொய்யாக இருக்க வேண்டும் என்றும் பயில்வான் ரங்கநாதன் சொல்வது நிஜமென்றால் கார்த்திக் குமார் பொய் சொன்னாரா என பல்வேறு பஞ்சாயத்துகள் சுசித்ரா அளித்த பேட்டியை தொடர்ந்து தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்து வருகிறது.

சுசித்ராவை வைத்து பிராங்க்: போதைப் பொருள் உட்கொண்டு விட்டு தனுஷ் மற்றும் அவரது கேங்கில் இருப்பவர்கள் சுசித்ராவை பிராங்க் செய்ய கார்த்திக் குமாரை வைத்து சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட போட்டோக்கள் தான் அந்த அந்தரங்க போட்டோக்கள் என்றும் அதுதான் சுச்சி லீக்ஸ் என வெளியானது என்று சுசித்ரா சொல்லியிருப்பது உண்மையாக கூட இருக்கலாம் என செய்யாறு பாலு பகீர் கிளப்பி உள்ளார்.

வலி தெரியுது: அந்த சம்பவத்துக்கு பிறகு சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிற பட்டம் கட்டி அவர் தான் பெரும் பாதிப்புகளை சந்தித்தார். சுச்சி லீக்ஸ் மூலமாக வெளியான புகைப்படங்களால் எந்தவொரு நடிகருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தாலி கட்டிய கணவரால் குழந்தை கொடுக்க முடியவில்லை என 12 ஆண்டுகள் போராடி விவாகரத்து பெற்றுள்ளேன் என சுசித்ரா சொல்லும் அவரது பேச்சில் வலி தெரிகிறது என செய்யாறு பாலு சுசித்ராவுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுசித்ராவுக்கு எதிராக வழக்கு தொடரவில்லை: தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் பற்றி சுசித்ரா பேசி வரும் நிலையில், அவருக்கு எதிராக யாருமே வழக்கு தொடரவில்லையே ஏன்? என்கிற கேள்வியையும் செய்யாறு பாலு தனது வீடியோவில் எழுப்பி உள்ளார். தனுஷ், சிம்பு, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரிஷா, சங்கீதா, கிரிஷ், கார்த்திக் குமார் என பலரது பெயர்களை வெளிப்படையாக பேசி வரும் சுசித்ராவுக்கு எதிராக சினிமாவில் உள்ளவர்கள் கூட எந்தவொரு கண்டனத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லையே ஏன் என்கிற கேள்வியையும் செய்யாறு பாலு எழுப்பி உள்ளார்.

எங்கே போய் முடியப்போகுதோ?: பல வருடங்கள் கழித்து மீண்டும் இந்த பிரச்சனையை சுசித்ரா ஏன் வெளியே கொண்டு வந்து பேசியுள்ளார் அதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், கார்த்திக் குமாரால் பாடகி சுசித்ரா ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தனது கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்று தொடர்ந்து சொல்லி வருவதில் உண்மை இருக்க வாய்ப்புகள் அதிகம் என செய்யாறு பாலு சுசித்ராவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். சுசித்ராவை விவாகரத்து செய்த பின்னர் அம்ருதா ஸ்ரீனிவாசன் என்பவரை கார்த்திக் குமார் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X