ரொம்ப தவறு.. இனி நான் பேட்டியே கொடுக்கமாட்டேன்.. சுசித்ராவின் திடீர் மாறுதல்

சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா சமீபகாலமாக அளிக்கும் பேட்டியில் பல விஷயங்களை ஓபனாக பேசிவருகிறார். அப்படி பேசும் விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. ரீமா கல்லிங்கல், கமல் ஹாசன், திரிஷா, தனுஷ், கார்த்திக் குமார் என அவர் பல பிரபலங்கள் பற்றி தனக்கு தெரிந்ததாக சில விஷயங்களை கூறுகிறார். அந்த விஷயங்கள் பல விவாதங்களை கிளப்பிய சூழலில்; ரீமா கல்லிங்கல் சுசித்ரா மீது புகாரும் கொடுத்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

பின்னணி பாடகி, பத்திரிகையாளர், ஆர்.ஜே, நடிகை என்று பன்முகங்களை கொண்ட சுசித்ரா யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவருகிறார். அவர் கொடுக்கும் பேட்டிகள் பல சர்ச்சைகளை கிளப்பிவருகின்றன. அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் சுசித்ரா மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார். மேலும் நடிகை ரீமா கல்லிங்கலும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ரெட் டாக்கீஸ் என்ற யூட்யூப் சேனலுக்கு சுசித்ரா பேட்டி அளித்தார்.

suchitra suchi leaks

திருமணம்: தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் வீட்டால் நிச்சயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருக்குமான திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதற்கு முக்கிய காரணம் சுச்சி லீக்ஸ் என்று சொல்லப்படுகிறது.

சுச்சி லீக்ஸ்: கடந்த 2016ஆம் ஆண்டு கோலிவுட்டில் பெரும் புயல் அடித்தது. அதாவது சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வரிசையாக வெளியாகின. தனுஷும், திரிஷாவும் ஒன்றாக இருந்தது, நிக்கி கல்ரானி, அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோரின் அந்தரங்கள் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பின. அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொரு நாளாக வெளியாகின. ஆனால் தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா கூறினார். மேலும் அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டதாக கார்த்திக் குமார் கூறினார்.

சுசித்ராவின் பேட்டி; சில வருடங்கள் அமைதியாக இருந்த சுசித்ரா சமீபத்தில் தொடர்ந்து பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார். அப்படி அவர் கொடுக்கும் பேட்டிகள் திரைத்துறையில் புது விவாதத்தை கிளப்பி வைக்கும். உதாரணமாக, 'கமல் ஹாசன் கொக்கைன் பார்ட்டி வைப்பார்' என கூறினார். அதுமட்டுமின்றி திரிஷா குறித்தும் தனுஷ் குறித்தும் ஏராளமான விஷயங்களை பேசினார். தற்போது மும்பையில் செட்டில் ஆகியிருக்கும் அவர் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

நோ பேட்டி: அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "என்னைய நலம்விரும்பிகளுக்கு. இப்போது நான் மும்பையில் Children's Publishingல் இருக்கிறேன். இது லட்சக்கணக்கான குழந்தைகளோடு என்னை கனெக்ட் செய்யும். நான் பல யூட்யூப் சேனல்களை பார்த்துவருகிறேன். அதில் தலைப்புகளில் என்னை தவறாக சித்தரிக்கின்றனர். பேசுகின்றனர். ஆனால் அதை பற்றி நான் யோசிக்கப்போவதில்லை. இனி எந்த ஒரு யூட்யூப் சேனலுக்கும் நான் பேட்டி அளிக்கமாட்டேன். எனது யூட்யூப் சேனலில் மட்டும் திரை விமர்சனங்கள், தத்துவம் சார்ந்த விஷயத்தை பகிர்வேன்" என்றார். முன்னதாக குழந்தைகளுக்காக சுசித்ரா புத்தகம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X