ஏன் அழுவுறீங்க?.. கொக்கைன் அடிக்கும்போது குழந்தை நினைவுக்கு வரலயா?.. ஸ்ரீகாந்த்தை விளாசும் சுசித்ரா

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதை பொருளை பயன்படுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் எனவே தனக்கு ஜாமீன் வேண்டுமென்று அவர் தாக்கல் செய்த மனுவையும் நிகாரித்தது நீதிமன்றம். இந்நிலையில் ஸ்ரீகாந்த் விவகாரம் குறித்து பிரபல பின்னணி பாடகி சுசித்ரா அளித்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு மது விடுதியில் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் அடிதடியில் ஈடுபட்டார். அப்போது அவரை கைது செய்த காவல் துறையினர்; அவரது மொபைலை ஆய்வு செய்தார்கள். அதில் கொக்கைன் உள்ளிட்ட போதை பொருளை விற்பனை செய்யும் பிரதீப் பற்றி தெரியவந்து; அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு வேண்டுமென்று கூறி கொக்கைன் போதை பொருளை பிரசாத் வாங்கியிருப்பது தெரிந்தது. பிரதீப்பும் உறுதியாக தெரிவித்தார்.

ஸ்ரீகாந்த் கைது: இதனையடுத்து அவரிடம் நுங்கம்ப்பாக்கம் காவல் துறையினர் விசாரித்தார்கள். முதலில் தான் போதை பொருள் பயன்படுத்தவில்லை என தெரிவித்தார். அதனை நம்பாத போலீஸ் அவரின் ரத்த மாதிரிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியது. அந்த பரிசோதனையின் முடிவில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியானது. அதனால் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Suchitra has strongly attacked Srikanth who was arrested in a drug case

ஜாமீன் மனு நிராகரிப்பு: சூழல் இப்படி இருக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் ஸ்ரீகாந்த். அதில், 'போதை பொருளை பயன்படுத்தி தவறு செய்துவிட்டேன். எனது மகனை கவனித்துக்கொள்ள வேண்டும். அதனால் தனக்கு ஜாமீன் வேண்டும்' என் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நீதிபதி ஸ்ரீகாந்த்துக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். தொடர்ந்து புழல் சிறையில் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டார் அவர்.

இதற்கிடையே காவல் துறையிடம் ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலத்தில், 'பிரசாத் என்னை வைத்து ஒரு படம் தயாரித்தார். பத்து லட்சம் ரூபாய் சம்பள பாக்கி இருந்தது. அந்தப் பணத்தை கேட்டபோது கொக்கைனை கொடுத்தார். ஒன்றிரண்டு முறை பயன்படுத்திய பிறகு மீண்டும் நானே கேட்கும் சூழலுக்கு ஆளானேன். நான் போதை பொருளை பயன்படுத்த மட்டும்தான் செய்திருக்கிறேன். யாரிடமும் விற்பனை செய்தது இல்லை' எனவும் தெரிவித்திருந்தார்.

முக்கிய தலைகள்: ஸ்ரீகாந்த் மட்டுமின்றி இன்னொரு நடிகரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும்; அவர் இப்போது தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் அல்லாமல் திரைத்துறையில் இன்னும் பல முக்கிய் தலைகள் போதை கலாசாரத்தில் சிக்கியிருப்பதாகவும் பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் ஸ்ரீகாந்த் விவகாரம் தொடர்பாக பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தனியார் ஊடகமான குமுதம் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

சுசியின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஸ்ரீகாந்த்துக்கு இப்போது ரசிகர்கள் திடீரென முளைத்திருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் அவருக்கு படங்கள் இல்லை. அப்போதெல்லாம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள். இப்போது ஏன் அழுவுகிறார்கள். குழந்தையை கவனிக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் நீதிமன்றத்தில் கலங்கியதை நினைத்து பலர் பரிதாபப்படுகிறார்கள். ஸ்ரீகாந்த் ஏன் இப்போது மகனை நினைத்து அழுக வேண்டும். கொக்கைன் அடிக்கும்போது மகனின் நினைப்பு வரவில்லையா?'. சினிமாவில் பலர் இந்த கொக்கைன் போதை பொருளை பயன்படுத்துகிறார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X