ஃபேஸ்புக்கில் பிரபல நடிகையை உறவுக்கு அழைத்த நெட்டிசன்
மும்பை: நெட்டிசன் ஒருவர் பிரபல நடிகையும், பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியிடம் ஃபேஸ்புக்கில் அசிங்கமான கேள்வி கேட்டுள்ளார்.
திரையுலக பிரபலங்கள் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர். அதில் பலர் ரொம்ப ஆக்டிவாக உள்ளனர். அதில் நடிகையும், பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர்.

ஃபேஸ்புக்கில் ஒருவர், ஃபோனில் நாம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று அசிங்கமாக கேட்டார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுசித்ரா அந்த கேள்வியை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு மும்பை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தேசிய குற்றப் பிரிவு கவுன்சிலில் வேலை செய்வதாகக் கூறி அந்த நபர் சுசித்ராவிடம் வம்பிழுத்துள்ளார்.
சுசித்ராவின் ட்வீட்டை பார்த்த மும்பை போலீசார் உடனே பதில் அளித்தனர். போலீசார் கேட்டுக் கொண்டபடி தனது தொடர்பு விபரங்களை சுசித்ரா அளித்தார்.
அதன் பிறகு மும்பை போலீசார் ட்விட்டரில் கூறியதாவது, உங்களின் புகாரை சமூக வலைதள பிரிவு மற்றும் சைபர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் நீங்கள் உதவி கேட்டு 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்களுக்கு ட்வீட்டும் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.
உங்களின் உரிய பதிலுக்கு நன்றி. உங்களின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்பினேனே தவிர எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் எனக்கு இப்படி மெசேஜ் அனுப்பினால், சமூக வலைதளங்களில் இருக்கும் பல இளம் பெண்களின் நிலை குறித்து யோசித்து பாருங்கள் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பிரபலங்களிடம் இது போன்று கேவலமான கேள்விகள் கேட்பது வழக்கமாகிவிட்டது. சில பிரபலங்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கான கமெண்டுகளை பார்க்கவே முடியாது, அந்த அளவுக்கு வக்கிரமாக இருக்கும்.
சமூக வலைதளம் என்பது பிறரை வறுத்தெடுக்க இருக்கும் தளம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











