ஆண்கள் தொப்பை பற்றி யாராவது கமென்ட் அடிப்பார்களா? பிரியங்காவின் டிரெஸுக்கு பிரபல நடிகை சப்போர்ட்

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி உடையில், கிராமி விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பிரபல நடிகை ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனாஸை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் கடந்த ஆண்டு பிரமாண்டமாக நடந்தது.

இதையடுத்து ஹாலிவுட்டில் நடக்கும் சினிமா விழாக்களுக்கு இருவரும் ஒன்றாகச் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

சிவப்பு கம்பளம்

சிவப்பு கம்பளம்

கடந்த சில நாட்களுக்கு முன் கோல்டன் குளோப் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸுடன் இதில் பங்கேற்றார்.

லிப்லாக் முத்தம்

லிப்லாக் முத்தம்

விழா தொடங்குவதற்கு முன், சிவப்புக் கம்பள வரவேற்பில் வந்த நிக் ஜோனாஸிடம், இருவரும் முத்தம் கொடுக்கும்படி கேட்கப்பட்டது. லிப்லாக் முத்தம் கொடுத்தனர். லிப்ஸ்டிக் நிக்கின் உதட்டில் ஒட்டியது. பின்னர் அதை துடைத்துவிட்டு பிரியங்கா அவரை அழைத்துச் சென்ற புகைப்படம் வைரலானது.

கவர்ச்சியாக உடை

கவர்ச்சியாக உடை

இந்நிலையில் கிராமி விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதிலும் நிக் ஜோனாஸுடன் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டார். சிவப்பு கம்பள வரவேற்பில் இவர்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரியங்கா, அந்தளவுக்கு கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார். இந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பிரியங்கா.

பச்சை பச்சையாக

பச்சை பச்சையாக

சில ரசிகர்கள் இதை ஏற்றுக்கொண்டாலும் பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். சிலர் பச்சை பச்சையாக திட்டியிருந்தனர். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ஆதரவாக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. இவர் பிரபல இயக்குனர் சேகர் கபூரின் மனைவி. சேகர் கபூர், கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்திருந்தார்.

விடுதலையின் உயரம்

சுசித்ராவின் பதிவில், பிரியங்கா தனது வயிற்றை மறைக்கவில்லை என்பதே அந்தப் புகைப்படத்தை அழகானதாக ஆக்குகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் உத்வேகம் அளிக்கும் ராக் ஸ்டாராக இருக்கிறார் அவர். உலகின் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா இப்படி வந்தது பெண் விடுதலையின் உயரம்.

கமென்ட் அடிப்பார்களா

கமென்ட் அடிப்பார்களா

நான் அவரின் ரசிகையாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், இந்தப் படம் அப்படி ஆக்கிவிட்டது. நாங்கள், எங்களில் உடலில் இல்லை. திறன்களின் மூலமும் திறமைகளின் மூலமே இருக்கிறோம். ஆணின் தொப்பை மற்றும் அதுபோன்ற தோற்றம் பற்றி யாராவது தைரியமாக கமென்ட் அடிப்பார்களா?

கடவுளுக்குத் தெரியும்

கடவுளுக்குத் தெரியும்

நாங்கள் அந்த கோரமான உருவத்தைத் தினமும் காண்கிறோம் என்பது கடவுளுக்குத் தெரியும். உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் உங்களின் நம்பிக்கையை பெறட்டும் பிரியங்கா என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சுசித்ரா இந்தியில் ஷாருக்கானின் கபி ஹான் கபி நா, அனில் கபூர் நடித்த மை வொய்ப்ஸ் மர்டர் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X