ஸ்வாகதா சர்ச்சை.. இசையமைப்பாளர் பெயரைச் சொன்ன பிரபல பாடகி.. பின்னாடி இவ்வளவு நடந்திருக்கா?
சென்னை: பாடகி ஸ்வாகதா விவகாரம் குறித்து பேச்சு தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யார் அந்த பிரபல இசையமைப்பாளர் என்று பலரும் கேள்வி கேட்டு வரும் நிலையில், பாடகி சுசித்ரா அந்த இசையமைப்பாளரின் பெயரைச் சொல்லியது மட்டும் இல்லாமல், இந்த பிரச்னைக்கு முன் என்ன நடந்தது? பிறகு என்ன நடந்தது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடகி சுசித்ரா, " தயவுசெய்து யாரையும் 'புகழ்பெற்ற, பிரபலமான பின்னணி பாடகர்' என்று அழைக்காதீர்கள். அந்த அடையாளத்தைப் பெற மேடைகளிலும், இரவு விடுதிகளிலும் தொடர்ந்து பாடக்கூடிய ஹிட் பாடல்களை அவர்கள் பாடி இருக்க வேண்டும். இந்த ஸ்வகதா ஒரு வளர்ந்து வரும் பாடகி மட்டுமே. இசையமைப்பாளர் உடனான காதல் தோல்வியில் முடிந்ததால், ஒட்டுமொத்த இசைத்துறையின் மீதும் அவர் பழி சுமத்துகிறார். அவர்களுக்கு இடையில் இருந்த உறவு என்பது டாக்சிக்கானது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு ஸ்வாகதாவிடன் இசையமைப்பாளர் கெஞ்சினார், ஆனால் ஸ்வாகதா அந்த இசையமைப்பாளரைத் தூக்கி வீசிவிட்டார். இஸ்பேட் இசையமைப்பாளர், இஸ்மாயில் ஸ்வகதா - அவ்வளவுதான் கதை.

ஆங்கிலமோ தமிழோ ஒழுங்காகப் பேசத் தெரியாத சிவசங்கரி, தனது ஆதாயத்திற்காக எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார். ஸ்வகதாவிடம் அந்தப் பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறி, மக்களை ஆத்திரமடையச் செய்வது அவரது பாணி. இந்த 'முதலைக் கண்ணீர்' பெண் தனது கன்டென்ட்டிற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்.

பொறாமையா?: இது குறித்து மாயா அமைதியாக இருப்பதிலிருந்தே இதில் உண்மை இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு இடையேயான ஒரு போட்டி. மாயாவின் 'மஞ்சுளா டீச்சர்' நகைச்சுவை வீடியோக்கள் மூலம் அவருக்குக் கிடைத்து வரும் புகழைக் கண்டு ஸ்வகதா பொறாமைப்படுகிறார். மாயா இதுவரை தன்னை பேட்டி எடுக்கவில்லை என்ற ஆதங்கம் ஸ்வாகதாவுக்கு இருக்கிறது. பாவம் அந்த இசையமைப்பாளர், இவனுங்க மப்புக்கு (போதைக்கு) அவர் இந்த உச்சி வெயிலில் ஊறுகாய் ஆகிவிட்டார் என்றும் பதிவிட்டுள்ளார்.
சும்மா இருக்காதே: மேலும் அந்த இசையமைப்பாளரை டேக் செய்து, பரவாயில்லை ப்ரோ, சிறந்தவர்களுக்கு இது போல நடக்கும். அதற்காக உங்கள் மீது கற்பழிப்பு புகார் சுமத்துவதை சும்மா உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் தரப்பு நியாயத்தையும் கூறுங்கள் என்று பதிவிடுள்ளார். இதுவரை இலைமறை காயாக இருந்த இசையமைப்பாளரின் பெயரை அப்பட்டமாக சுசித்ரா சொல்லிவிட்டதால், அடுத்து என்ன ஆகும் என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications