இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது இவர் தான்.. என்ன காரணம்?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பாடகி சுசித்ரா தான்.

உள்ளே வரும் போது, தூக்கிக் கொண்டாடிய அர்ச்சனா, வெளியே போகும் போது கிட்ட கூட வந்து வழியனுப்பவில்லை.

மற்ற எலிமினேஷன் மாதிரியே சுசித்ராவின் எலிமினேஷனும் வெள்ளிக்கிழமையே கசிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

அதிக நாமினேஷன்

அதிக நாமினேஷன்

சுசித்ரா வந்த முதல் வாரம் என்பதால், எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர், தீபாவளி பண்டிகை அதனை முன்னிட்டு எலிமினேஷனே நடக்கவில்லை. இந்நிலையில், மூன்றாவது வாரத்திலேயே, வந்த வேகத்திலேயே அதிகமான எவிக்‌ஷன் நாமினேஷன் பெற்றார் சுசித்ரா.

பாலாவுடன் நெருக்கம்

பாலாவுடன் நெருக்கம்

சுசித்ரா பிக் பாஸ் வீட்டில் சம்யுக்தா, ஷிவானி நாராயணன் என யாரிடமும் அதிகமாக பேசவே இல்லை. பாலாஜி முருகதாஸ் உடன் மட்டுமே அதிக அளவில் நெருக்கமானார். அவர்களுக்குள் அப்படி என்ன பாசம் என்றே தெரியவில்லை. அடிச்சிக்கோ, புடிச்சிக்கோ பாசம் போன்று தான் இருந்தது.

கன்னத்தில் நச்

கன்னத்தில் நச்

பாலாஜி முருகதாஸிடம் சாரி சொல்லிவிட்டு, சட்டென கன்னத்தில் நச்சென்று சுசித்ரா கொடுத்த முத்தம் ரசிகர்களை ரொம்பவே ஷாக் ஆக்கியது. ஷிவானி, சனம் போல சுசித்ராவும் பாலாஜியை காதலிக்கிறா? என்கிற பேச்சுக்களும் அடிபட தொடங்கின. ஆனால், சுசித்ரா வழிந்து வழிந்து பேசினாலும், அவர் கொடுத்த முத்தத்தை துடைத்து எறிந்தது போலவே கடைசி வரைக்கும் சுச்சியை அவர் தூரத்திலே வைத்திருந்தார்.

கனவில் அப்பா

கனவில் அப்பா

சில நாட்களுக்கு முன்னாடி தனது கனவில் அப்பா வந்து, நீ பண்ற நல்லதை எல்லாம் பிக் பாஸ் ஷோ நடத்துறவங்க, போட்டுக் காட்ட மாட்றாங்க, நீ பண்ற சில்மிஷத்தை மட்டுமே போட்டுக்காட்டுறாங்க, நீயாவே வெளியே வந்துடுன்னு சொன்னார் என்பது போல, பிக் பாஸ் வீட்டில் இரவு நேரத்தில் அலறியதாக பரவிய தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பேசினார்.

இந்த வாரம் இவர் தான்

இந்த வாரம் இவர் தான்

என்ன தான் எலிமினேஷன் கசிந்தாலும், அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியின் வழியாக அந்த நபர் வெளியேறுவதை பார்க்கவே ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்து இருந்தனர். சம்யுக்தா, அனிதா, சுசித்ரா என கடைசியாக இருந்த நிலையில் சுசித்ராவின் கார்டை காட்டி சீக்கிரம் வாங்க என கமல் அவரை எலிமினேட் பண்ணினார்.

அதிலும் அவசரம்

அதிலும் அவசரம்

அவரச கதியில் வந்த வேகத்திலேயே விட்டெறிந்த பந்து போல திரும்பி விட்டார் சுசித்ரா. லக்கேஜ் பேக் எதுவுமே கூட எடுக்காமல், டோரை தட்டி திறங்க என்று ரொம்பவே அவசரப்பட்டார். சுசித்ராவுக்கு எப்போ உண்டியல் கொடுத்தாங்கன்னே தெரியல, சட்டென உண்டியலை தூக்கிப் போட்டு விட்டு, கிளம்புவதில் ரொம்பவே குறியாக இருந்தார்.

ஹவுஸ்மேட்கள் மேல கோபம்

ஹவுஸ்மேட்கள் மேல கோபம்

சுசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தது பெரும்பாலான போட்டியாளர்களுக்கு பிடிக்கவே இல்லை. பாலாவுடன் நெருங்கி பழக அவர் ஆரம்பித்ததும், ஷிவானிக்கும், சம்யுக்தாவுக்கும் கூட சுத்தமாக பிடிக்கவில்லை. இன்னொரு கேங் பக்கம் இவர் போய் பேசவே இல்லை. இந்நிலையில், 9 பேர் சுசித்ராவை நாமினேஷன் பண்ணி திட்டம் போட்டு தன்னை வெளியே அனுப்பிட்டாங்க என்கிற கோபத்தின் வெளிப்பாட்டை வெளியேறும் போது நல்லாவே காட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X