விஜய்க்கும் சங்கீதாவுக்கும் பிரச்னையா?.. திரிஷாவின் ரோல் இதுதானாம்.. மீண்டும் ஆரம்பித்த சுசித்ரா
சென்னை: பாடகி சுசித்ரா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். கடந்த மாதம் முழுக்க சுசித்ராவின் பேட்டிகளே யூட்யூபில் சென்சேஷ்னல் ஆனது. அதற்கு பிறகு அமைதியாக இருந்த சுசித்ரா இப்போது மீண்டும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்ப ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் விஜய், திரிஷா குறித்து பேசியிருக்கிறார் அவர்.
வானொலியில் ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. முக்கியமாக பின்னணி பாடகியாக வெகு பிரபலமானவர் சுசித்ரா. மங்காத்தாவில் இடம்பெற்ற வாடா பின்லேடா, வேட்டைக்காரனில் இடம்பெற்ற சின்னத்தாமரை உள்ளிட்ட பல பாடல்களை பாடிய சுசித்ரா கடந்த 2016ஆம் ஆண்டு தலைப்பு செய்தியாக மாறினார். அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாகரத்து: அவர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். சுச்சி லீக்ஸ் சமயத்தில் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும்; அதனால்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார். அதற்கு பிறகு சுசித்ராவை காணவில்லை. அதேசமயம் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்துகொண்டு இப்போது இன்னொருவரை திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார் சுசித்ரா.
சுசித்ராவின் பேட்டி: கிட்டத்தட்ட 8 வருடங்கள்வரை எங்கிருந்தார் என்று தெரியாத சுசித்ரா இப்போது அண்மையில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் சுச்சி லீக்ஸ் என்பதே தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் செய்த பிராங்க்தான். முக்கியமாக அந்தப் புகைப்படங்களை திரிஷாதான் வெளியிட்டார் என்று சொல்லி பகீர் கிளப்பினார் சுசித்ரா.
திரிஷாவின் பதிலடி: மேலும் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறையில் இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷா, “நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்து பேசுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே சுசித்ரா மீது அவரது முன்னாள் கணவர் கார்த்திக் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததை அடுத்து சுசித்ரா அமைதியானார்.
மீண்டும் ஆரம்பித்த சுசித்ரா: இந்நிலையில் சுசித்ரா மீண்டும் சர்ச்சையாக பேச ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நடிகை திரிஷா ஒரு ஒட்டுண்ணி. அரசியலில் இறங்கியிருக்கும் விஜய் அதில் ஜொலிக்க வேண்டும் என்றால் அவர் முதலில் தன் குடும்பத்துடன் இணைய வேண்டும். அப்பாவுடன் சேர வேண்டும். முக்கியமாக சங்கீதாவுடன் இணைய வேண்டும். எம்ஜிஆரிடமிருந்து ஜெயலலிதா எப்படி கட்சியை பிடுங்கினாரோ அதேபோல் திரிஷா விஜய்க்கு செய்வார்” என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக கடந்த சில மாதங்களாகவே விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் பிரச்னை போய்க்கொண்டிருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தி என்பதே விஜய் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதேபோல் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திரிஷா பகிர்ந்திருந்த புகைப்படத்தை வைத்தும் ஒரு சிலர் பெரும் வதந்தியையும், கிசுகிசுவையும் கிளப்பிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











