சகுனி வேலையை ஆரம்பித்த சுசித்ரா.. பாலாவையும் ஷிவானியையும் பிரிக்க மாஸ்டர் பிளான்.. இனிதே ஆரம்பம்!
சென்னை: சுசித்ரா வந்த வேலை இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்தே சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் பண்ணி வெளியேற்றி விட்டார்.
அடுத்து பாலாவையும் ஷிவானியையும் பிரேக் பண்ணி ரெண்டு பேரையும் வீட்டுக்கு பேக் பண்ண பக்கா பிளான் போட்டு விளையாடுகிறார்.

வீக் பாயின்ட்
பாலாஜி முருகதாஸின் வீக்னெஸ் என்ன என்பதை வெளியே இருந்து நல்லா பார்த்து வைத்துக் கொண்ட சுசித்ரா, அவரிடம் பழகுவது போல பழகி பெரிய ஆப்பு வைக்க திட்டமிட்டு வருவது பச்சையாக தெரிகிறது. சுசித்ரா விரித்த பாசக்கயிறு தெரியாமல், பாச வலை என பாலாவும் விழுந்து விட்டார்.

லேசு பட்ட ஆள் இல்லை
ஒரே அடியாக பாலாவையும் பாவம் என நினைத்து விடக் கூடாது. அவரும் லேசு பட்ட ஆள் இல்லை. தனக்கு வேண்டியதை மட்டுமே மற்றவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், தேவை இல்லை என்றால் தூக்கி எறியவும் நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு கேம் ஆடி வருகிறார்.

அல்லக்கை அனிதா
பாலாவின் புதிய அல்லக்கை அசிஸ்டன்ட்டாக அனிதா சம்பத், சேர்ந்துள்ளார் என சில தினங்களாக அவரது நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அவரிடம், சுசித்ரா தனது சோகக் கதையையும் பாலா தன்னை தவறாக நினைக்கிறான். அவன் கூட ஃபிரெண்டா பழகத்தான் ஆசைப்படுகிறேன் என பேசுவதை எல்லாம் கேட்டு ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி விட்டனர்.

ஷிவானி கிளப்ப திட்டம்
வெளியே உனக்கும் பாலாவுக்கும் ரொமான்ஸ் மியூசிக் எல்லாம் போட்டு விட்டு, நல்லாவே கோர்த்து விட்டு வருகின்றனர் என சுசித்ரா ஷிவானியிடம் தந்திரமாக பேசி அவரை ஏடு கிளப்ப பார்க்கிறார். நான் ஏற்கனவே சீரியல்ல கல்யாணமான பொண்ணாலாம் நடிச்சிட்டேன், பாலா எல்லாம் எனக்கு பிஸ்கோத்து மேட்டர் என்பது போல ஷிவானி சுச்சியின் பேச்சை கேட்டும் கேட்காதவர் போல ரியாக்ட் பண்ணது செம!

சுச்சியை மதிக்காத பாலா
அனிதா வந்து பாலா கிட்ட சுச்சி இப்படியெல்லாம் ஃபீல் பண்றாங்க என பேசி தூது புறாவாக செயல்பட்டார். ஆனால், பாலாவோ சுசித்ராவை சட்டையே பண்ணல. சுசித்ரா வந்து பாலாவிடம் பேசும் போதும், மதிக்காத மாதிரியே இருந்த பாலா, எனக்கு எப்போ பேசணும்னு தோணுதோ அப்ப பேசுவேன் என்ற கோணத்தில் பேசினார்.

வெடி வெடிக்கும்
என்ன தான் பாலா உஷாராக இருந்தாலும், சுசித்ரா ஆடும் சூப்பரான மைண்ட் கேம் அவருக்கு புரியவில்லை என்று தான் தோன்றுகிறது. ஷிவானியையும், பாலாவையும் அழகாக பிரிக்க சுசித்ரா செய்யும் இந்த வேலை நிச்சயமாக அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெடிக்கும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











