»   »  தனுஷ் பாடகி சுசித்ராவின் கையை புடுச்சு இழுத்தாரா?: கார்த்திக் சொல்லும் உண்மை

தனுஷ் பாடகி சுசித்ராவின் கையை புடுச்சு இழுத்தாரா?: கார்த்திக் சொல்லும் உண்மை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அவரின் கணவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு பார்ட்டியில் நடிகர் தனுஷின் ஆட்கள் தன் கையை பிடித்து இழுத்து தாக்கி காயப்படுத்தியதாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

காயம் அடைந்த தனது கையை புகைப்படம் எடுத்தும் கடந்த 20ம் தேதி ட்விட்டரில் வெளியிட்டார். மேலும் தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்வதாகவும் கூறினார்.

கார்த்திக்

கார்த்திக்

தனது மனைவி ட்விட்டரில் கூறியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும், இது தனிப்பட்ட பிரச்சனை என்றும், புரிந்து கொள்ளுமாறும் கடந்த 23ம் தேதி கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்தார்.

ஹேக்

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக 24ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார் கார்த்திக். 24ம் தேதி தான் சுசியின் ட்விட்டர் கணக்கு அவருக்கு மீண்டும் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

மன்னிப்பு

மன்னிப்பு

கடந்த சில நாட்களாக வெளியான ட்வீட்டுகளை சுசி வெளியிடவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் கார்த்திக்.

சுசி

சுசி

உங்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதா என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ஹேக் எல்லாம் செய்யப்படவில்லை என சுசி ட்வீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Singer Suchitra's husband Karthik said on Facebook that her wife's twitter account was hacked and retrieved on february 24th only.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil