தனுஷை விட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரொம்ப மோசம்.. பாடகி சுசித்ரா மீண்டும் பரபரப்பு பேட்டி!

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றியதாக பகீர் குற்றச்சாட்டை பாடகி சுசித்ரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இருவரில் தனுஷை விட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் ரொம்பவே மோசம் என்றும் அவர் தான் அதிகளவில் தனுஷை ஏமாற்றியதாக சுசித்ரா கூறியுள்ளார்.

சூரியன் எஃப்எம் ஆர்ஜேவாக இருந்து பிரபலமானவர் சுசித்ரா. அதன் பின்னர் "மன்மதன்" படத்தின் "என் ஆசை மைதிலியே", காளை படத்தின் "குட்டி பிசாசே", "போக்கிரி" படத்தில் இடம்பெற்ற "என் செல்லப்பேரு ஆப்பிள்' என ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடி நம்பர் ஒன் பாடகியாக ஒரு கட்டத்தில் வலம் வந்தார்.

Suchitra says Aishwarya Rajinikanth cheated Dhanush on most times

"யாரடி நீ மோகினி" படத்தில் தனுஷ் நண்பராக நடித்த கார்த்திக் குமார் மற்றும் சுசித்ரா காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், சுச்சி லீக்ஸ் விவகாரம் அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணமே பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவர்கள் இருவரும் அதையெல்லாம் தாண்டி 17 ஆண்டுகள் இரண்டு மகன்களை பெற்று வளர்த்து திருமண வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிரியப் போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். சமீபத்தில், இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற கோரிக்கை விடுத்தது மேலும், ஷாக்கை கிளப்பியது.

சுச்சி லீக்ஸ் சமயத்தில் கூட: நடிகர் தனுஷ் பெயர் சுச்சி லீக்ஸ் சமயத்தில் அடிபட்டு சில புகைப்படங்களும் கசிந்தன. சில முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ரகசிய வாழ்க்கை குறித்த வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அப்போது கூட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவை அறிவிக்கவில்லை.

”3” படத்தின் போது பஞ்சாயத்து: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து படு நெருக்கமாக ”3” படத்தில் நடித்தபோது தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் டேட்டிங் சென்றதாக சர்ச்சைகள் வெடித்தன. அப்போதே தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்து பிரியப் போவதாக வதந்திகள் பரவின. ஆனால், அந்த பிரச்சனை எல்லாம் முடிந்த நிலையில், பல வருடங்கள் கழித்து தற்போது திடீரென இருவரும் பிரிய அதைவிட பெரிய பிரச்சனை நடந்திருக்கும் என்று பலரும் சொல்லி வரும் நிலையில், பாடகி சுசித்ரா தனுஷை விட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் ரொம்பவே மோசமானவர் என்றும் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி உள்ளனர் என்றும் பேசியுள்ளார்.

ஐஸ்வர்யா ரொம்ப மோசம்: தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் இருவரும் அறைக்குள் தனியாக படுக்கையில் என்ன என்ன பண்ணாங்க தெரியுமா? என படுமோசமான குற்றச்சாட்டுகளை சுசித்ரா அடுக்கிய நிலையில், தனுஷை பார்த்தால் அறைந்து விடுவேன் என்று கூறினார். ஆனால், டெவிலை விட டீப் சீ தான் ரொம்பவே ஆபத்தானது என தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப மோசம் என சமீபத்திய பேட்டியில் சுசித்ரா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுசித்ராவின் இந்த பேச்சை கேட்டு தனுஷ் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். தொடர்ந்து தனுஷ் பற்றிய அவதூறு கருத்துக்களை சுசித்ரா அடுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X