போதை பொருள்.. நடிகை போட்ட கொக்கி?.. தப்பித்த அர்ஜுன், அரவிந்த்சாமி?.. சுசித்ரா ஓபன் டாக்

சென்னை: ஸ்ரீகாந்த்தும், நடிகர் கிருஷ்ணாவும் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் மட்டுமின்றி இன்னும் சில நடிகர்கள், நடிகைகள் மேலும் சிக்கலாம் என்றும் பெரும்பாலானோரால் கருதப்படுகிறது. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா பேச்சியிருக்கும் விஷயம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டபோது அவரிடம் நடந்த விசாரணையில் இன்னொரு கதவு திறந்தது. அதாவது நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் வரவழைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தான் போதை பொருள் பயன்படுத்தியது இல்லை என்று அடித்து கூறினார்.

மருத்துவ பரிசோதனை: தொடர்ந்து அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட போதை பொருளான கொக்கைனை அவர் சில முறை பயன்படுத்தியிருப்பது உறுதியானதால் கைது செய்யப்பட்டார். அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிபதி அதிரடியாக நிராகரித்தார். இப்போது ஸ்ரீகாந்த் புழல் சிறையில் இருக்கிறார்.

Suchitra says Manisha Koirala gave drugs to Aravind Swamy and Arjun
Photo Credit:

கிருஷ்ணாவும் கைது: ஸ்ரீகாந்த்தை போல் கிருஷ்ணாவும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருந்தார். முதலில் அவர் தலைமறைவு ஆகிவிட்டார் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அவர் தனது வழக்கறிஞருடன் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, 'தனக்கு இரைப்பை அலர்ஜி இருக்கிறது. சிகிச்சை எடுத்துவருகிறேன். நான் போதை பொருளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை' என்று கூறினார்.

அவரும் சிக்கினார்: இருப்பினும் கிருஷ்ணாவை நம்புவதற்கு காவல் துறையினர் தயாராக இல்லாததால் அவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவர் பயன்படுத்தவில்லை என்றே வந்தது. ஆனால் அவர் போதை பொருள் பயன்படுத்தினார் என்று உறுதியான தகவல் போலீஸுக்கு கிடைத்ததால்; கிருஷ்ணாவின் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆராய்ந்தன. அதில் போதை பொருள் வாங்கியதற்கான ஆதாரம் கிடைத்தது. எனவே அவரும் கைது செய்யப்பட்டார்.

சுசித்ரா பேச்சு: இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வரும் சிலர்தான் போதை கலாசாரத்தை தமிழ் சினிமாவில் பரப்பிவருகிறார்கள். நடிகை மனிஷா கொய்ராலாகூட தன்னுடன் நடித்த நடிகர்களான அரவிந்த்சாமி, அர்ஜுன் ஆகியோருக்கு ஒருமுறை போதை பயன்படுத்துமாறு கொக்கி போட்டார்.

மறுத்துவிட்டார்கள்: ஆனால் நல்வாய்ப்பாக அவர்கள் அதனை தீவிரமாக மறுத்துவிட்டார்கள். அதில் ஒரு நடிகர் மனிஷா கொய்ராலாவை அடிக்கவே பாய்ந்துவிட்டார். மேலும் மனிஷாதான் மணிரத்னத்துக்கு போதை பொருள் பழக்கத்தை ஏற்படுத்தினார். அவருடைய முன்னாள் காதலரே போதை பொருள் டீலராக இருந்தார்" என்றார். அவரது இந்தப் பேட்டி பலரிடம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. முன்னதாக சுசித்ரா கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா துறையினரிடம் போதை பொருள் கலாசாரம் பெருகிவிட்டதாக தொடர்ந்து கூறிவந்தார். ஆனால் அதை பெரிதாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி சுசித்ரா தனக்கு வேண்டாதவர்களை பற்றி அவதூறாக பேசுகிறார் என்றும் பலர் நினைத்தார்கள். ஆனால் இப்போது கோலிவுட்டை சுற்றியிருக்கும் போதை பொருள் வழக்கு பிரச்னையை வைத்து பார்க்கையில் சுசித்ரா சொல்லியதெல்லாம் உண்மைதானோ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X