கொக்கைன் கல்ச்சரை கொண்டுவந்ததே அவங்கதான்.. சிம்பு, யுவன் பற்றி சுசித்ரா இஷ்டத்துக்கு பேசுறாங்களே

சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா தொடர்ந்து பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தப் பேட்டிகள் மூலம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் குறித்து அவர் கூறும் விஷயங்கள் திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திவருகின்றன. திரிஷா, தனுஷ் குறித்து பேசிய சுசித்ரா இப்போது சிம்பு, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் குறித்தும் பகிரங்கமாக பேசியிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பெரும் புயலை ஏற்படுத்திய ஆண்டுகளில் ஒன்றுதான் 2016. அந்த வருடம் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியான அந்தரங்க புகைப்படங்கள் பேசுபொருளாகின. தனுஷும், திரிஷாவும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள், அக்‌ஷரா ஹாசன், நிக்கி கல்ரானி உள்ளிட்டோர் சம்பந்தமான ஃபோட்டோக்கள் வெளியாகின. அதனை சுசித்ராதான் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியிட்டார் என்று அப்போது பேசப்பட்டது. பிறகு அந்த விவகாரம் மெல்ல மெல்ல அணைந்து போனது.

Suchitra Says Shocking Information About Simbu And Yuvan Shankar Raja

சுசித்ராவின் ரீ என்ட்ரி: அந்த விவகாரத்துக்கு பிறகு தனது கணவர் கார்த்திக் குமாரை டைவர்ஸ் செய்தார் சுசித்ரா. பின்பு சுசித்ராவும் அமைதியாக இருந்தார். இப்போது திடீரென யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துவருகிறார். இப்போது அவர் அளித்துவரும் பேட்டியில் சுச்சி லீக்ஸ் சமயத்தில் இதுதான் நடந்தது என்று பல விஷயங்களை பேசிவருகிறார். அது சுச்சி லீக்ஸைவிடவும் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. முக்கியமாக தனுஷ், திரிஷா மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகிறார்.

கமலையும் துரத்தும் சுசித்ரா: தனுஷ், திரிஷா, கார்த்திக் குமார், ஆண்ட்ரியா, அனிருத் உள்ளிட்டோர் மீது மட்டுமின்றி கமல் ஹாசனையும் இந்த விவகாரத்துக்குள் இழுத்துவிட்டிருக்கிறார் சுசித்ரா. அதாவது கமலின் பர்த் டே பார்ட்டி என்றாலே வெள்ளி தாம்பூலத்தில் வைத்து கொக்கைன் கொடுப்பார்கள் என்று கூறி பகீர் கிளப்பினார். அதேபோல் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து தனுஷ், திரிஷா உள்ளிட்டோர்தான் பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டார்கள் என்றும் கூறுகிறார்.

திரிஷா ஆடிய ஆட்டம்: மேலும் எலைட் மக்கள் தங்களுக்குள் பிராங்க் செய்துகொள்வார்கள் என்றும்; அப்படி ஒருமுறை திரிஷா பார்ட்டியின்போது அவருக்கு கொடுக்கப்பட்ட Dareக்காக போதையில் சென்று விஜய் வீட்டு முன்பு நடனம் ஆடி பாடல் பாடினார் என்றும் சொல்லி புதிய தீயை பற்ற வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர், அவரும் தனுஷும் ஒரே அறைக்குள் என்ன செய்தார்கள் என்று கேள்வியும் எழுப்பினார். இப்போது சுசித்ரா விவகாரம்தான் சமூக வலைதளங்களிலும், கோலிவுட்டிலும் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.

சிம்பு, யுவன் பற்றி சுசித்ரா: நிலைமை இப்படி இருக்க தான் அளித்திருக்கும் இரண்டாவது பேட்டியில் போதை கலாசாரம் குறித்து பேசியிருக்கிறார் சுசித்ரா. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தனுஷ், அனிருத்தால் நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன் என்று தனுஷும், அனிருத்தும்தான் எனது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து பதிவு போட்டார்கள். முழு போதையில் சிரித்துக்கொண்டே அதனை செய்தார்கள். பிறகு இரண்டு நாட்கள் கழித்து எனக்கு ஃபோன் செய்து அக்கவுண்ட் ஹேக் ஆகிவிட்டதாக பதிவு போடுமாறு என்னிடம் சொன்னார்கள்.

போதை கலாசாரம்: இங்கு தனுஷுக்கு சிம்புவை பிடிக்காது; சிம்புவுக்கு விஷாலை பிடிக்காது. ஆனால் எல்லோரும் சேர்ந்து ஒரே வீட்டில் பார்ட்டி செய்வார்கள். அந்த எலைட் மக்கள்தான் போதை கலாசாரத்தையே கொண்டு வந்தார்கள். சிம்பு, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு போன்ற பணக்கார வீட்டு பசங்கதான் அதனை கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒருகாலத்தில் நம்ம ஊர் மஞ்சும்மெல் பாய்ஸ் போல் இருந்தார்கள்.

பாடல் பதிவுக்காக ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு சென்றால்கூட அங்கும் இந்த போதை பொருட்கள் எல்லாம் இருக்கும். அது எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாக அமைந்தது. கமல் பர்த்டே பார்ட்டியில் வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன் வரும் என்று சொன்னது மிகையில்லை" என்றார். சுசித்ராவின் இந்தப் பேட்டி மேற்கொண்டு ஒரு பரபரப்பை கோலிவுட்டில் கிளப்பியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X