நயன் லீக்ஸ் வரும்.. நயன்தாராவுக்கு தனுஷ் ரூட் விட்டார், துன்புறுத்தினார்.. சுசித்ரா ஓபன் டாக்

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக ஹாட் டாபிக்காக இருப்பது நயன்தாரா Vs தனுஷ்தான். தன்னைப் பற்றிய ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் வேண்டுமென்றே முட்டுக்கட்டை போட்டார் என்றும்; மூன்று நொடி வீடியோக்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டார் என்றும் நயன் ஒரு கடிதத்தை எழுதினார். இதனையடுத்து பலரும் தனுஷுக்கு எதிராக கருத்து தெரிவித்துவருகிறார்கள். இந்தச் சூழலில் இவ்விவகாரம் குறித்து சுசித்ரா ஓபனாக பேசியிருக்கிறார்.

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்துகொண்ட நயனுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள். மேலும் காதலால் அவதூறுகளையும், விமர்சனங்களையும் சந்தித்த அவர்; இனியாவது நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறினார்கள். அந்தத் தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

dhanush nayanthara suchitra

Nayanthara Beyond The Fairy Tale: சூழல் இப்படி இருக்க நயனின் வாழ்க்கை பயணம் பற்றியும், திருமணம் ஆனது குறித்தும் Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் தயாரானது. 2022ஆம் ஆண்டு இந்த ஆவணப் படத்தை தயார் செய்து நெட்ஃப்ளிக்ஸிடம் நயன் 20 கோடி ரூபாய்வரை விற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் ரிலீஸில் தாமதமானதற்கு தனுஷ்தான் முக்கிய காரணம் என்றும் சொல்லபப்ட்டது.

என்ன நடந்தது?: அதாவது இந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் பட காட்சிகளை உபயோகப்படுத்த தனுஷிடம் நயனும், விக்கியும் அனுமதி கேட்டதாகவும்; அதற்கு தனுஷ் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து ட்ரெய்லரில் மூன்று விநாடிகள் வரக்கூடிய நானும் ரௌடிதான் ஷூட்டிங் ஸ்பாட் க்ளிப்பிங் இடம்பெற்றது. அதனையடுத்து நானும் ரௌடிதான் தயாரிப்பாளர் என்கிற முறையில் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

நயன் கடிதம்: இதனையடுத்து ஒருவழியாக இன்று அந்த ஆவணப் படம் ரிலீஸானது. இதற்கிடையே தனுஷை கண்டித்து மூன்று பக்க அளவில் நயன்தாரா சில நாட்களுக்கு முன்பு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் தனுஷை கடுமையாக தாக்கியிருந்தார். மேலும் தந்தையாலும், அண்ணனாலும்தான் நீங்கள் வளர்ந்தீர்கள் என்றும் ஓபனாக பேசியிருந்தார். இதனையடுத்து நயனுக்கு எதிராக தனுஷ் ரசிகர்களும், தனுஷுக்கு எதிராக நயன்தாராவின் ரசிகர்களும் கோதாவில் குதித்திருக்கிறார்கள்.

சுசித்ரா பேட்டி: இந்நிலையில் பின்னணி பாடகி சுசித்ரா இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தனுஷுக்கு நயன்தாரா கடிதம் எழுதியதை அடுத்து இன்ஸ்டாகிராமில் எனக்கு ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்துகொண்டே இருந்தன. நயன் ஓபனாகவும், தைரியமாகவும் தனுஷ் பற்றி பேசியிருக்கிறார். மேலும் அந்தக் கடிதத்தை பார்த்த பிறகு பலரும் என்னிடம், 'நீங்கள் தனுஷை பற்றி சொன்னபோது யாரும் நம்பவில்லை. இப்போது நயன்தாராவே பேசியிருக்கிறார்' என்று கூறினார்கள்.

தனுஷ் ஒரு சைக்கோ: தனுஷ் ஒரு முத்திப்போன சைக்கோ. யாரடி நீ மோகினி பட சமயத்தில் நயன்தாராவை தனுஷ் பெர்சனலாக துன்புறுத்தினார். அதுமட்டுமின்றி அவரும், கார்த்திக் குமாரும் சேர்ந்து நயனுக்கு ரூட்டும் விட்டார்கள். அப்போதே நான் நயனிடம், 'உனக்கு நல்ல நல்ல படங்கள் அமைய வேண்டும். இந்த மாதிரி தொல்லை கொடுக்கும் நடிகர்களுடன் சேர்ந்து நீ நடிக்காமல் இருக்க வேண்டும்' என்றேன். செட்டுக்கு வரும்போது ஒரு ஃபார்மாலிட்டிக்கு தனுஷை பார்த்து நயன்தாரா ஹாய் என்று சொன்னால்; அதை காதல் என்று தனுஷ் எடுத்துக்கொள்வார். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இன்னும் பத்து நாட்களில் நயன் லீக்ஸ் என்ற ஒன்று வரும். அதனை தனுஷே ஆள் வைத்து வெளியிடுவார்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X