twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷிவானிக்கு டாட்டாவா.. சுச்சியை அப்படி கட்டிப்பிடித்து கொஞ்சுறாரு பாலா.. ஏத்தி விடுறது தெரியலையா?

    |

    சென்னை: ஷிவானியை தங்கச்சின்னு சொன்னதை பார்த்து கூட ஷாக்காகாத பிக் பாஸ் ரசிகர்கள், சுச்சியை கட்டிப்பிடித்து பாலா கொஞ்சியதை பார்த்து நிச்சயம் ஷாக் ஆகியிருப்பார்கள்.

    சீக்கு வந்த கோழி போல ரொம்ப பாவமா இருக்கிற சுச்சியை அப்படி கட்டிப்பிடித்து உலுக்கி கேஸ்ல ஏதாவது மாட்டிக்கப் போற பாலா என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    இதெல்லாம் கூட பரவாயில்லை, 'ஹானஸ்ட்' பஞ்சாயத்தை கிளப்பி விட்டு, சுச்சி கொளுத்திப் போட்டது இருக்கே வேற லெவல்.

    ரிலீசுக்கு முன்பே லீக்கான சூரரைப் போற்று.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!ரிலீசுக்கு முன்பே லீக்கான சூரரைப் போற்று.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!

    சூனியக்காரி சுசித்ரா

    சூனியக்காரி சுசித்ரா

    சுரேஷ் சக்கரவர்த்தி கொளுத்திப் போட்டது போல அடுத்து கொளுத்திப் போட யாருமே இல்லையே என பிக் பாஸ் நினைத்து புலம்பி கன்ஃபெஷன் ரூமுக்குள் அழுது கொண்டிருக்கும் நிலையில், சுசித்ரா சூனியக்காரி போல பாலாவை தூண்டி விட்டு நல்லா எரியவிட்டு நேற்றைய எபிசோடில் குளிர் காய்ந்ததை கண்டு ரசிகர்கள் ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டாங்க.

    பாலா மேல ஒரு கண்ணு

    பாலா மேல ஒரு கண்ணு

    பிக் பாஸ் வீட்டில் வந்ததில் இருந்தே பாடகி சுசித்ராவுக்கு பாடி பில்டிங் பயில்வான் பாலா மீது ஒரு கண்ணு இருக்கு. நீதிமன்ற டாஸ்க்கிலும் பாலாவுக்கு சாதகமாகவே ஏகப்பட்ட தீர்ப்புகளை சொன்னார். பாலாவின் எதிரியான சனம் ஷெட்டியை பேச விடாமல் செய்தார். பாலாவுக்கு பக்கத்திலே ஒட்டி உரசி உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

    ஹானஸ்ட் சண்டை

    ஹானஸ்ட் சண்டை

    சோமசேகர் திருடி வைத்திருந்த சொத்து பத்திரத்தை பாலா திருடியதை பார்த்த கேபி, அது பற்றி பேசிக் கொண்டிருந்தார். பாலவுக்கும், ஷிவானிக்கும் இடையே சண்டை வரும் போது கூட பாலா, ஷிவானி பக்கம் நிற்காமல், இருவருக்கும் நடுவே வந்து சண்டையை சரி செய்து விட்டு போனார். ஆனால், வெளியே போகும் போது சுச்சி சும்மா இல்லாமல், பாலா ஹானஸ்ட்டா இல்லைன்னு கேபி சொன்னா என சண்டையை கொளுத்திப் போட்டார்.

    சீன் போட்ட சுச்சி

    சீன் போட்ட சுச்சி

    கேமை கேமா விளையாடணும், பாலாவை எப்படி ஹானஸ்ட் இல்லைன்னு சொல்லலாம் என பாலாவுக்கு அருகே அமர்ந்து கொண்டு சுசித்ரா அழுது புலம்பி சீன் போட்டதும், பாலாவும் சுச்சிக்கு வசதிக்கு இல்லைன்னாலும் பரவாயில்லை அசதிக்காவது ஆறுதல் சொல்வோமே என மேலே கைப் போட்டு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்.

    உன் பைசப்ஸ் சைஸ் கூட இல்லை

    உன் பைசப்ஸ் சைஸ் கூட இல்லை

    சுசித்ராவை எப்படி கலாய்ப்பது என நேரம் பார்த்துக் கொண்டிருந்த அனிதாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. உன் பைசப்ஸ் சைஸ் கூட அவங்க ஃபேஸ் இல்லை என சுச்சியை அனிதா நல்லாவே வச்சு கலாய்த்து விட்டார். நிச்சயம் இந்த வார்த்தைக்காக அனிதாவுக்கும் சுச்சிக்கும் அடுத்த எபிசோடில் ஒரு சண்டை இருக்கும்.

    கடுப்பில் கிளம்பிய ஷிவானி

    கடுப்பில் கிளம்பிய ஷிவானி

    சுசித்ராவை மடியில் போட்டுக் கொஞ்ச ஆரம்பித்த பாலாவை பார்த்ததும் ஷிவானி நைஸாக கிளம்பி சென்று விட்டார். பின்னர், சம்யுக்தா, இருவருக்கும் இடையே பஞ்சாயத்து செய்து வைப்பது போல, பேசிய போது, சுசித்ரா நல்லா ஏத்தி விடுறா, புரிஞ்சு நடந்துக்கோ என பாலாவை உஷார் படுத்திய காட்சிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் செம என்டர்டெயின்மென்ட்டாக சென்றன.

    English summary
    Balaji Murugadoss totally changed into puppet of Suchitra and Shivani Narayanan left from him. After Samyuktha wants to save Balaji from Suchitra’s trap.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X