சைந்தவி கை அப்போ என்ன பூ பறிச்சதா?.. ஜிவி பிரகாஷுக்கு ஃபுல் சப்போர்ட் செய்யும் பிரபலம்
சென்னை: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். தங்களது திருமணத்துக்காக கிட்டத்தட்ட 12 வருடங்கள் காத்திருந்தார்கள். திருமணத்துக்கு பிறகு இணக்கமாக வாழ்ந்துவந்த அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த அவர்கள் திடீரென பிரிவை அறிவித்தது ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ். ஆனால் படத்தின் பாடல்களை கேட்ட பிறகு இந்தப் பையனுக்குள் என்னமோ இருக்கு என்று ஜிவியை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த சின்ன வயதில் ஜிவி வெயிலுக்கு போட்ட இசையை கேட்ட பலரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போயினர். அதற்கு பிறகு தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த பிரகாஷ் தமிழின் முன்னணி மற்றும் முக்கியமான இசையமைப்பாளர் என்ற இடத்துக்கு வந்தார்.

இசையமைப்பாளர் டூ நடிகர்: இசையமைப்பாளராக சிறப்பாக சென்றுகொண்டிருந்த ஜிவி பிரகாஷுக்கு திடீரென நடிக்கும் ஆசை வந்தது. அதன்படி டார்லிங் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் அதற்கு பிறகு நடித்த சில படங்கல் வரிசையாக தோல்வியை சந்தித்தன. அப்படிப்பட்ட சூழலில் பாலாவின் நாச்சியார் படத்தில் நடித்தார். படம் படுத்துவிட்டாலும் ஜிவி பிரகாஷின் நடிப்பு பாராட்டப்பட்டது. அதற்கு பிறகு அவர் நடித்த சர்வம் தாளமயம், சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன.
ஜிவியின் திருமணம்: இதற்கிடையே பின்னணி பாடகி சைந்தவியை காதலித்தார் ஜிவி பிரகாஷ். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். சிறு வயதிலிருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்துவிட்டது. பிறகு வீட்டு சம்மதத்துக்காகவும்; நிலையான ஒரு இடத்தை பிடிப்பதற்காகவும் இரண்டு பேருமே 12 வருடங்கள் தங்களது திருமணத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக திருமணம் முடிந்தது. அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருக்கிறது.
தாயின் ஆசை: இருவரும் பிரிந்ததற்கு ஜிவி பிரகாஷ் நடிக்க ஆரம்பித்தது மட்டுமின்றி நெருக்கமான காட்சிகளில் நடித்ததுதான் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் உண்மையான காரணம் என்னவென்று அவர்களுக்குத்தான் தெரியும். மேலும் ஜிவி - சைந்தவி பிரிவதற்கு ஜிவியின் தாய் ரெஹானாதான் காரணம் என்று கொளுத்திப்போட்டார்கள் சிலர். ஆனால் அதில் உண்மை இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
சுசித்ரா பேட்டி: இந்நிலையில் பாடகி சுசித்ரா இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து காரணத்தைத்தான் அவர்களே தெளிவாக சொல்லிவிட்டார்களே. ஆனால் ஒன்று ஜிவி அந்த மாதிரி படங்களில் நடித்ததுதான் காரணம். இருப்பினும் ஜிவி அப்படி நடிக்க ஆரம்பித்தபோதே சைந்தவி இதை சொல்லியிருக்க வேண்டும்தானே. அப்போ என்ன அவரது கை பூவா பறித்துக்கொண்டிருந்தது"என்றார்.


Click it and Unblock the Notifications











