தனுஷ், திரிஷா கும்பல் போதை கும்பல்?.. அவர்கள் கடலுக்குள் போக வேண்டும்.. சுசித்ரா ப்ரூட்டல் அட்டாக்

சென்னை: தமிழ் சினிமாவில் ஃபேமஸான பின்னணி பாடகிகளில் ஒருவராக இருந்தவர் சுசித்ரா. ஏராளமான ஹிட் பாடல்களை பாடிய அவர்; சுச்சி லீக்ஸ் விவகாரத்தி பரபரப்பாக பேசப்பட்டார். ஆனால் அதை செய்தது தான் இல்லை தனுஷ்தான் பின்நாட்களில் கூறினார். இடையே கொஞ்சம் சைலெண்ட்டான அவர்; சமீபமாக மீண்டும் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் தனுஷ் குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி, நடிகை என பல முகங்களை கொண்டிருந்தவர் சுசித்ரா. எக்கச்சக்க படங்களில் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். அவரது கரியர் நன்றாக போய்க்கொண்டிருந்தபோது; சுச்சி லீக்ஸ் விவகாரம் தலைதூக்கியது. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் ஒவ்வொன்றாக ட்விட்டரில் வந்துகொண்டே இருந்தன. அது அந்த சமயத்தில் கோலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தின.

Suchitra Targets Dhanush and Trisha Again Viral Interview Sparks Fresh Controversy
Photo Credit:

மன ரீதியாக பிரச்னை?: அந்த சமயத்தில் நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக்கை திருமணம் செய்திருந்தார் சுசி. சுசித்ராவுக்கு மன ரீதியாக பிரச்னை இருப்பதால் இது மாதிரியெல்லாம் நடந்துவிட்டதாக அப்போதைக்கு கார்த்திக் தெரிவித்திருந்தார். தொடர்ந்து இவ்விவகாரம் பூதாகரமானதால் கார்த்திக்கை டைவர்ஸும் செய்துவிட்டார் சுசி. இப்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். சினிமாவில் முன்னர் போல் இயங்குவதில்லை.

புயலை கிளப்பும் பேட்டிகள்: சைலெண்ட்டாக இருந்த அவர்; சில வருடங்களாக தொடர்ந்து பேட்டிகள் கொடுத்துவருகிறார்கள். பல யூடியூப் சேனல்களில் அவர் கொடுக்கும் பேட்டிகள் எல்லாம் பெரிய பூகம்பங்களை ஏற்படுத்தும். அதேசமயம் அவர் சொல்வதெல்லாம் பொய்தான் என்று ஒருதரப்பினர் கூறினாலும்; அது பொய் என்றால் சுசித்ரா சொல்பவர்கள் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்; கண்டிப்பாக கொஞ்சமேனும் உண்மை இருக்கும் என இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.

Also Read
மூன்று வேளை சோத்துக்கு பாடு.. புலம்பிய விஜய்.. அட இப்படியும் ஃபீல் செஞ்சிருக்காரா?
மூன்று வேளை சோத்துக்கு பாடு.. புலம்பிய விஜய்.. அட இப்படியும் ஃபீல் செஞ்சிருக்காரா?

கிளப்பிய பரபரப்புகள்: அவர் தனது பேட்டிகளில் ஏகப்பட்ட பரபரப்புகளை கிளப்பியிருக்கிறார். முக்கியமாக கோலிவுட்டில் நடக்கும் போதை பார்ட்டிகள் பற்றியெல்லாம் ஓபனாக பேசுவார். கமல் வீட்டில் போதை பார்ட்டி நடந்தது, திரிஷா, ரம்யா கிருஷ்ணனுக்கு திருமணம் நடந்தது, தனுஷ் கேங்கே ஒரு போதை கும்பல்; அவர், திரிஷா எல்லாம் சேர்ந்துதான் சுச்சி லீக்ஸை செய்தார்கள் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதிலும் வழக்கம்போல் தனுஷ், திரிஷாவை தாக்கியிருக்கிறார்.

சுசித்ரா பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "நான் பொதுவாக யாரிடமும் பேசமாட்டேன். பேட்டிகள் கொடுப்பதே பிடிக்காது. ஆனால் தனுஷ் உள்ளிட்டோர் சுச்சி லீக்ஸ் செய்த விவகாரத்திலிருந்துதான் நிறைய பேசுகிறேன். தனுஷ், திரிஷா கும்பலே போதை கும்பல். அவர்கள் அப்படியே கடலுக்குள் என்று மறைந்துவிட்டால் போதும். எனக்கு கோலிவுட்டை பிடிக்காதுதான். ஆனாலும் நான் அவர்களை பற்றி பேசுவேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X