»   »  நான் கருப்பாக இருப்பதால் குறைந்த சம்பளம்: நடிகர் பரபர புகார்

நான் கருப்பாக இருப்பதால் குறைந்த சம்பளம்: நடிகர் பரபர புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தான் கருப்பினத்தை சேர்ந்தவன் என்பதால் தனக்கு குறைந்த சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது என்று மலையாள பட தயாரிப்பாளர்கள் மீது புகார் தெரிவித்துள்ளார் நடிகர் சாமுவேல் ராபின்சன்.

ஜகரியா முகமது இயக்கத்தில் கடந்த மாதம் 23ம் தேதி வெளியான மலையாள படம் சூடானி ஃப்ரம் நைஜீரியா. இந்த படத்தில் நைஜீரியாவை சேர்ந்த 19 வயது சாமுவேல் ஏ ராபின்சன் நடித்திருந்தார்.

கேரளாவில் வசிக்கும் நைஜீரிய இளைஞர் அங்கிருக்கும் கால்பந்து கிளப் அணியில் சேர்ந்து வெற்றி வீரனாக மாறுவதே படத்தின் கதை. இந்நிலையில் சாமுவேல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,

சம்பளம்

சம்பளம்

சூடானி ஃப்ரம் நைஜீரியா படத்தில் எனக்கு மிகவும் குறைந்த சம்பளம் கொடுத்தார்கள். நான் கருப்பினத்தை சேர்ந்தவன் என்பதால் இந்த பாகுபாடு. இந்திய கலைஞர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட எனக்கு குறைவாக கொடுத்துள்ளனர்.

நிறம்

நிறம்

எனக்கு ரூ. 1.80 லட்சம் சம்பளம் கொடுத்தார்கள். ஆப்பிரிக்கர்கள் ஏழைகள். அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியாது என்று எனக்கு மிகவும் குறைவான சம்பளம் கொடுத்துள்ளனர்.

உதவி

உதவி

படத்தின் இயக்குனர் ஜகரியா முகமது எனக்கு உதவி செய்ய நினைத்தார். ஆனால் அவர் படத்தை தயாரிக்காததால் அவரால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

வெற்றி

இது மிகவும் குறைந்த பட்ஜெட் படம் என்றதால் குறைந்த சம்பளத்திற்கு ஒப்புக் கொண்டேன். அதன் பிறகு பட்ஜெட் குறைவு இல்லை என்பது தெரிந்தது. படப்பிடிப்பின்போது இரவு நேரத்தில் தங்கிய இடம், சாப்பிட்ட உணவு எல்லாம் சரியில்லை. படம் வெற்றி பெற்றால் கூடுதல் பணம் தருவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் படம் நன்றாக ஓடியும் எனக்கு பணம் கொடுக்கவில்லை என்றார்.

Read more about: salary சம்பளம்
English summary
Sudani from Nigeria actor Samuel A Robinson said that the producers paid him very less because of his race. He posted a video on facebook about this issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X