அரசியல்ல சாதாரணம் தான் என்கிறது சீரியல் உலகம் இவருக்கு பதில் இவர்
Recommended Video
சென்னை : தொலைக்காட்சித் தொடர்களில் ஹீரோ ,ஹீரோயின் ,இயக்குனர் என்று மாற்றிக்கொண்டே இருப்பது இயல்பான விஷயமாகிவிட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்" ஆயுத எழுத்து" என்ற தொடரில் ஹீரோ ஹீரோயினை அதிரடியாக மாற்றியுள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்னால் இதே விஜய் டிவி தொலைக்காட்சியில் 7C என்ற தொடரில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீத்து கிருஷ்ணன் . இந்தத் தொடரில் இவர் பள்ளியில் படிக்கும் மாணவியாக நடித்திருந்தார். இந்தத் தொடர் பெரிய வரவேற்பை பெற்றது.

மீண்டுமொரு
இடைவேளைக்குப்பிறகு அவர் நடித்த தொடர் ஆயுத எழுத்து . இந்தத் தொடரில் சப் கலெக்டர் வேடத்தில் இந்திரா வாக நடித்துக்கொண்டிருந்தார் .இவருக்கு ஜோடியாக அம்ஜத் கான் என்ற நடிகர் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.

அம்ஜத் கான் பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோ " நாளைய இயக்குனர் "என்ற ப்ரோக்ராமில் குறும்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் . அவருடைய நடிப்பு திறமையை கண்டு அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.வல்லினம் என்ற படத்தில் பேஸ்கட்பால் பிளேயராக நடித்திருந்தார் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

பிறகு இவரும் "ஆயுத எழுத்து" தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நேரத்தில் அதிரடியாக ஸ்ரீத்து மற்றும் அம்ஜத் கானை இந்த தொடரில் இருந்து வெளியேற்றினார்கள் .

இந்த வெளியேற்றத்தை பற்றி நடிகர் அம்ஜத் யிடம்கேட்டபோது இவருக்கு சினிமா மட்டும் வெப்சீரிஸ் களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் இந்த தொடரில் இருந்து வெளியேறியதாகவும் கூறியிருக்கிறார். நடிகை ஸ்ரீத்து ஒரே வாக்கியத்தில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று தன்னுடைய பதிலை சுருக்கமாக முடித்துக் கொண்டார் .அதிரடியான இந்த முடிவிற்கு பின்னால் இருக்கும் உண்மையை என்னவென்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











