ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீரென விசிட் கொடுத்த நடிகை குஷ்பூ

சென்னை : வெகு நாட்களுக்கு பிறகு இப்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன.

கடும் கட்டுப்பாடுகளுடன் 60 பேரை மட்டுமே கொண்டு ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்து வந்த நிலையில்.. சின்னத்திரை படப்பிடிப்புக்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

எனவே படப்பிடிப்புக்கள் உரிய பாதுகாப்புடன் நடக்கிறதா என நடிகை குஷ்புவும், இயக்குனர் ஆர் கே செல்வமணியும் சின்னத்திரை படப்பிடிப்பு தளங்களுக்கு திடீர் விசிட் கொடுத்துள்ளனர்.

சின்னத்திரை படபிடிப்பு

சின்னத்திரை படபிடிப்பு

கடுமையான வைரஸ் தொற்றின் காரணமாக பல மாதங்களாக வேலைவாய்ப்பு இல்லாமல் சரியான வருமானமும் இல்லாமல் பல சின்னத்திரை குடும்பங்கள் கஷ்டப்பட்டு வருவதால் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக சின்னத்திரையை சேர்ந்த பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

சாத்தியமில்லை

சாத்தியமில்லை

இதற்கு முதலில் பாதுகாப்பு நலன் கருதி மறுப்பு தெரிவித்து வந்த அரசு பின் நீண்ட நாட்களுக்கு பிறகு 20 பேரை மட்டும் வைத்துக்கொண்டு சூட்டிங்கை நடத்த அனுமதி அளித்தது. வெறும் 20 பேரை மட்டும் வைத்துக்கொண்டு ஷூட்டிங்கை நடத்த வாய்ப்பு இல்லை அவ்வாறு நடத்துவதற்கு சாத்தியமில்லை என பெப்சி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இயக்குனர் ஆர். கே. செல்வமணி பல பேட்டிகளிலும் பல இடங்களிலும் குறிப்பிட்டு வந்தார்.

 படப்பிடிப்புகள் தொடக்கம்

படப்பிடிப்புகள் தொடக்கம்

இந்நிலையில் சின்னத்திரை சங்கத்தின் சார்பாக நடிகை குஷ்புவும், பெப்சி தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்.கே. செல்வமணியும் தமிழக அரசிடம் 60 பேருடன் படப்பிடிப்பு நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீண்ட மௌனம் காத்த தமிழக அரசு இப்போது மொத்தமாக 60 நபர்களை மட்டும் வைத்து ஷூட்டிங் நடத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனை முழுமனதாக வரவேற்ற சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் இப்போது படப்பிடிப்புகளை நடத்த முறையான பாதுகாப்பு வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு

தீவிர கண்காணிப்பு

இந்நிலையில் நடிகை குஷ்பு இன்று அதிரடியாக படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார் அதில் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றதா, மேலும் படப்பிடிப்பு நடக்கும் இடங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாகவும், தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா மற்றும் கட்டாய மாஸ்க் அனைவரும் அணிந்து படப்பிடிப்புகள் செயல்படுகின்றதா என்பதை கண்காணிக்க திடீரென விசிட் கொடுத்தார் நடிகை குஷ்பூ, உடன் ஆர்.கே செல்வமணியும் இருந்து படப்பிடிப்புத் தளங்களை கண்காணித்தனர்.

 திரைத்துறையினர் கவலை

திரைத்துறையினர் கவலை

இவ்வாறு நேரில் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று அந்த இடங்களை கண்காணித்தும் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் அந்தந்த படப்பிடிப்பு நடத்தப்படுகிறதா என ஆராய்ந்த பின்னர் அதன் புகைப்படங்களை நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவ்வாறு சின்னத்திரை படப்பிடிப்புகள் அடிப்படை கட்டுப்பாடுகளுடன் தொடங்கி வருவதையொட்டி திரைப்பட கலைஞர்களும், திரைத் துறையைச் சார்ந்தவர்களும் இது போன்று அவர்களது படப்பிடிப்புகளை எப்போது ஆரம்பிக்கப் போகிறோம் என்ற கவலையில் இருந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X