twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தரமான கல்விக்கு முக்கியத்துவம்.. அறக்கட்டளை மூலம் 4 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த பிரபல ஹீரோ..!

    By
    |

    பெங்களூரு: பிரபல ஹீரோ நான்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து உள்ளார்.

    Recommended Video

    அமிதாப் முன்னிலையில் சிரஞ்சீவி - நயன்தாரா திருமணம்!

    ராஜமவுலி இயக்கிய, நான் ஈ, சிம்புதேவன் இயக்கிய புலி, கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்திருப்பவர் கன்னட ஹீரோ சுதீப்.

    தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சல்மான் கானின், தபாங் 3 படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    இந்தப் படத்தில் அவர் கேரக்டர் பேசப்பட்டது. அடுத்து கோட்டிகோப்பா 3 என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். இதில் மடோனா செபாஸ்டின், ஸ்ரத்தா தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். லாக்டவுன் காரணமாக இந்தப் படம் தள்ளி போயிருக்கிறது. அடுத்து பாண்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக உடலை இறுக்கி, முறுக்கி வைத்திருக்கிறார். படத்தில் சிக்ஸ்பேக்கில் வருகிறார் அவர்.

    ஒர்க் அவுட் போட்டோ

    ஒர்க் அவுட் போட்டோ

    இதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். சமீபத்தில் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த ஒர்க் அவுட் புகைப்படங்கள் வைரலாயின. படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி கூறும்போது, 'நாங்கள் சிக்ஸ்பேக் வேண்டும் என்று சுதீப்பிடம் கேட்கவில்லை. ஆனால், அவர் அதோடு வருவார் என்று நம்புகிறோம்' என்று தெரிவித்திருந்தார்.

    அரசுப் பள்ளிகள்

    அரசுப் பள்ளிகள்

    இந்நிலையில் தனது அறக்கட்டளை மூலம் கர்நாடகாவில் நான்கு அரசுப் பள்ளிகளை நடிகர் சுதீப் தத்தெடுத்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பல நடிகர், நடிகைகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். நடிகர் சுதீப், கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் இருக்கும் நான்கு அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளார்.

    கட்டமைப்பு வசதிகள்

    கட்டமைப்பு வசதிகள்

    ஒப்பவஹள்ளி அரசு பள்ளி, சல்லாகேரே பள்ளி, பரசுராமபுர பள்ளி,, சித்ரதுர்கா அரசு பள்ளி ஆகிய பள்ளிகளை அவர் தத்தெடுத்துள்ளார். பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள், தரமான கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சுதீப் டிரஸ்ட் தெரிவித்துள்ளது. அதோடு, அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக பல திட்டங்களையும் வைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

    English summary
    Actor Sudeep has adopted four government schools in Karnataka
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X