ரூ. 15 கோடி கொடுத்தும் வில்லனாக நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. அப்செட்டில் ஷங்கர்.. டாப் 5 பீட்ஸில்!

சென்னை: 15 கோடி ரூபாய் கொடுத்தும் வில்லனாக நடிக்க மறுத்த பிரபல நடிகரால் இயக்குநர் ஷங்கர் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

ரூ. 15 கோடி கொடுத்தும் வில்லனாக நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. அப்செட்டில் ஷங்கர்.. டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் டோலிவுட் என பல்வேறு சினிமாக்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் மற்றம் அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

மேலும் ஹாலிவுட் சினிமா தொடர்பான தகவல்களையும் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

திரையரங்குகள் திறக்கப்படவில்லை

திரையரங்குகள் திறக்கப்படவில்லை

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் படம் வசூலில் சாதனை படைத்திருப்பதை கூறியுள்ளார் பிகே. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் திரையரங்குகள் சரிவர திறக்கப்படவில்லை.

10 நாளில் 10 கோடி ரூபாய்

10 நாளில் 10 கோடி ரூபாய்

இந்நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோடியில் ஒருவன் படம் 10 நாட்களில் 10 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

3 நாட்களில் 13 மில்லியன் டாலர்

3 நாட்களில் 13 மில்லியன் டாலர்

இதேபோல் ஹாலிவுட்டில் வெளியான ஷாங் சி படம் அதிக வசூலை குவித்துள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆன 3 நாட்களில் 13 மில்லியன் டாலர்களை குவித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் அதிக வசூலை குவித்ததாக கூறப்பட்ட பிளாக் விடோ படத்தின் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது.

பொங்கலுக்கு பீஸ்ட் ரிலீஸ்

பொங்கலுக்கு பீஸ்ட் ரிலீஸ்

அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வசூல் பாதிக்கப்படும் என்று எண்ணிய படக்குழு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டது. ஆனால் பொங்கலுக்கு பீஸ்ட் படம் ரிலீஸ் ஆகும் என்பதால் அண்ணாத்த படத்தை தீபாவளிக்கே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

வில்லனாக நடிக்க மறுத்த சுதீப்

வில்லனாக நடிக்க மறுத்த சுதீப்

பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக பிரபல நடிகர் சுதீப்பிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 12 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகர் சுதீப்புக்கு 15 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியும் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டாரம் சுதீப்.

வெற்றி மாறனுடன் கமல்

வெற்றி மாறனுடன் கமல்

இதேபோல் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் வெற்றி மாறனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X