இதனால் சகலமானவர்களுக்கும்... அந்தப் படத்தில் இருக்கிறாரா இல்லையா? நடிகர் சுதீப் அதிரடி பதில்
பெங்களுரு: ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் தான் நடிப்பதாக வந்த தகவல் குறித்து நடிகர் சுதீப் பதில் அளித்துள்ளார்.
பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம், ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிக்கின்றனர்.
சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கையை கொண்ட படமான இதன் கதையை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

பிரிட்டீஸ் நடிகை
பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பிரிட்டீஸ் நடிகை, டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென விலகினார். அவருக்குப் பதிலாக, ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரிஸ் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஐரிஸ் நடிகை
மேலும் தோர், கிங் ஆர்தர் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஜேம்ஸ்பாண்ட் படமான எ வியூ டு கில், இண்டியானா ஜோன்ஸ், த லாஸ்ட் குருசேட் உட்பட பல படங்களில் நடித்துள்ள ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பில் சுதீப்
இந்நிலையில் இதில் பிரபல கன்னட ஹீரோ சுதீப் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ராஜமவுலியின் நான் ஈ, பாகுபலி படங்களில் சுதீப் நடித்திருந்தார். இதன் படப்பிடிப்பில் நாளை முதல் சுதீப் பங்கேற்கிறார் என்று செய்திகள் பரவின.
பேச்சுவார்த்தை
இந்நிலையில், இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ளார் சுதீப். 'நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. அதுபற்றி வரும் செய்தியில் உண்மையில்லை. இந்தப் படத்துக்கு என்னை யாரும் அணுகவில்லை. எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











