லேடி சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ.. அட்டகாசமான அப்டேட்!
சென்னை : நடிகை நயன்தாரா இப்போது தனது சொந்த தயாரிப்பில் நெற்றிக்கண் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் இறுதியாக தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல நிறுவனத்திற்கு நடிக்கும் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெற்றிக்கண்
தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளவர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார். அந்த வகையில் தனது சொந்த தயாரிப்பில் நெற்றிக்கண் திரைப்படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ளார் இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக
நானும் ரவுடிதான் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா நடித்து வர சமந்தா மற்றுமொரு ஹீரோயினியாக நடிக்கிறார். இந்தப் படத்தையும் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அண்ணாத்த படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
Recommended Video

அறிமுக இயக்குனர்
இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டூடியோவுக்கு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த திரைப் படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை என சொல்லப்படும் நிலையில் இதில் ஒரு படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார்.

வில்லன் கதாபாத்திரத்தில்
நயன்தாராவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவுக்கு வில்லன் கதாபாத்திரமும் இருப்பதால் கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ள சுதீப் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எஸ்எஸ் ராஜமவுலியின் நான் ஈ படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற சுதீப் தொடர்ந்து விஜய்யின் புலி படத்திலும் நடித்திருந்தார். இவரின் சமீபத்திய சில கன்னடப் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நயன்தாராவுக்கு வில்லனாக சுதீப் நடிக்க இருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











