'நாங்க கேட்கலை, ஆனா அதோடதான் வருவார்..' சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு பிரபல ஹீரோ இரவு பகல் பயிற்சி!
சென்னை: நடிகர் சுதீப், தனது அடுத்தப் படத்துக்காக அதிரடி உடற்கட்டோடு நடிக்க இருக்கிறார்.
பிரபல கன்னட நடிகர் சுதீப். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில், ராஜமவுலி இயக்கிய நான் ஈ, சிம்புதேவன் இயக்கிய புலி, கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்திருக்கிறார்.

மடோனா செபஸ்டின்
இந்தியில் சல்மான் கானின், தபாங் 3 படத்தில் சுதீப் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் கேரக்டர் பேசப்பட்டது. அடுத்து கோட்டிகோப்பா 3 என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். இதில் மடோனா செபஸ்டின், ஸ்ரத்தா தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சிவகார்த்திக் இயக்கும் இந்தப் படம் லாக்டவுன் காரணமாக தள்ளி போயிருக்கிறது.

சிக்ஸ்பேக்
இதையடுத்து சுதீப் இப்போது, கன்னடத்தில் உருவாகும் பான்டோம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக உடலை இறுக்கி, முறுக்கி வைத்திருக்கிறார். படத்தில் சிக்ஸ்பேக்கில் வருகிறார் அவர். இதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். சமீபத்தில் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த ஒர்க் அவுட் புகைப்படங்கள் வைரலாயின.

பயில்வான்
இந்நிலையில், பான்டோம் படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி கூறும்போது, 'நாங்கள் சிக்ஸ்பேக் வேண்டும் என்று சுதீப்பிடம் கேட்கவில்லை. ஆனால், அவர் அதோடு வருவார் என்று நம்புகிறோம். சமூக ஊடகங்களில் வெளியாகும் அவரது புகைப்படங்கள் மூலம் அவரது முயற்சியை பார்த்துவருகிறோம். பயில்வான் படத்துக்காக உடல் எடையை குறைத்திருந்தார்.
Recommended Video

தீவிர பயிற்சி
இப்போது இந்தப் படத்துக்காக, உடலை ஏற்ற தீவிர பயிற்சிப் பெற்று வருகிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் நடக்கும்போது ஷூட்டிங் முடிந்ததும் ஜிம்முக்கு என்னையும் வரச் சொன்னார், சுதீப். சென்றேன். அவர் மூலமாக உடற்பயிற்சி செய்ய தொடங்கினேன். இல்லை என்றால், ஒர்க் அவுட் பற்றி எந்த முயற்சியும் செய்திருக்க மாட்டேன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











