சுதா சந்திரனின் தந்தை காலமானார்… மீண்டும் உங்கள் மகளாக பிறக்க வேண்டும் உருக்கமான ட்வீட் !
மும்பை : மூத்த நடிகை சுதா சந்திரனின் தந்தை கே.டி.சந்திரன் மாரடைப்பால் காலமானார்.
மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர்.
சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தந்தை
சுதாவின் தந்தை கே.டி சந்திரனுக்கு மே 12 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு. ஜூஹுவில் உள்ள க்ரிட்டி கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல நடிகர்
கே.டி.சந்திரன் ஒரு பிரபலமான நடிகராவார். இவர், ஹம் ஹைன் ரஹி பியார் கே, சீனா கேட், ஜப் பியார் கிசிஸ் ஹோடா ஹை, தேரே மேரே சப்னே, கோய் மில் கயா போன்ற பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஐ லவ் யூ அப்பா
அவரது இறப்பு குறித்து, அவரது மகள் சுதா சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், போய் வருங்கள் அப்பா, நாம் மீண்டும் சந்திப்போம்.. உங்கள் மகள் என்பதில் எனக்கு மிகவும் பெருமை.. நான் உங்கள் கொள்கைகளைப் பின்பற்றுவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் நான் மீண்டும் உங்கள் மகளாக பிறக்க வேண்டும்.ஐ லவ் யூ அப்பா என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகை
சுதா சந்திரன், மயூரி திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சர்வம் சக்திமயம், தர்மம், நம்பினார் கெடுவதில்லை, வசந்தராகம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை இவர் தொகுந்து வழங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











