5 தேசிய விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று.. தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாடிய சுதா கொங்கரா!

சென்னை: மாதவனின் இறுதிச்சுற்று படத்தின் மூலமே ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து அந்த படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய காரணமாக இருந்தவர் இயக்குநர் சுதா கொங்கரா.

Recommended Video

Soorarai Pottru National Award | ஜெயிச்சிட்டோம் மாறா | வென்று காட்டிய சூரரைப் போற்று *India

அடுத்ததாக சூர்யாவை இயக்கி அவர் கொடுத்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்களை பிரம்மிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

நடிகர் சூர்யா மற்றும் சூரரைப் போற்று படத்துக்கென 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சுதா கொங்கரா கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக நவம்பர் 12ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் வெளியானது. நேரடியாக ஓடிடியில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் ரிலீசானதற்கே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பெரும் பிரச்சனையை சந்தித்தது. ஆனால், படத்தை பார்த்த பலரும் இந்த படம் ஓடிடியில் வெளியாகாமல் தியேட்டரில் வெளியாகி இருந்தால் அப்பவே மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியிருக்கும் எனக் கூறினர்.

5 தேசிய விருதுகள்

5 தேசிய விருதுகள்

ஆஸ்கர் போட்டிக்கு சென்று சில சுற்றுகள் முன்னேறிய நிலையில், அதன் பின்னர் முன்னேற முடியாமல் சூரரைப் போற்று பின் வாங்கிய நிலையில், இந்த படத்துக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்ததை போலவே தற்போது 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை சுதா கொங்கரா, சிறந்த திரைப்படம் என 5 விருதுகளை தட்டித் தூக்கியது.

ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்

ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்

சூரரைப் போற்று, ஜெய்பீம் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், இனி தியேட்டரில் சூர்யாவின் படங்களை திரையிட விடமாட்டோம் என சில திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்த நிலையில், தியேட்டரில் வெளியானது. சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படங்கள் சில தியேட்டர்களில் சிறப்பு திரையிடலாக வெளியானது. இந்நிலையில், தேசிய விருதுகளை அள்ளிக் குவித்துள்ள நிலையில், இன்றும் ஒரு பிரபல தியேட்டரில் சூரரைப் போற்று திரையிடப்பட்டது.

கேக் கட்டிங்

கேக் கட்டிங்

அந்த ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கில் இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பங்கேற்றனர். பின்னர், விருது பெற்றதை முன்னிட்டு கேக் கட்டிங் செய்யப்பட்டது. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. நடிகர் சூர்யாவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி, கீர்த்தி சுரேஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X