அமரன் தந்த வெற்றி.. சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் படத்தின் பட்ஜெட்டே இத்தனை கோடியா? அப்போ சம்பளம்?

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. எந்தளவுக்கு வெற்றிப் படம் என்றால் தமிழ்நாட்டில் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்ததில் விஜய்யின் கோட் படத்தையே அமரன் படம் முறியடித்துள்ளது என்கின்றனர். சில தியேட்டர்களில் அமரன் படத்தின் வசூல் கோட் படத்தின் வசூலை முந்தி முதலிடம் பிடித்துள்ளது.

கோட் திரைப்படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 480 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக கூறப்படும் நிலையில், 125 கோடி பட்ஜெட்டில் உருவான அமரன் திரைப்படம் 320 கோடி ரூபாய் வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.

sk25 sivakarthikeyan sudha kongara


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடிப்பில் உருவாகவுள்ள எஸ்கே 25 படத்தின் பட்ஜெட் தற்போது அதிரடியாக எகிறியுள்ளதாகவும் சிவகார்த்திகேயனின் சம்பளமும் அதற்கு இணையாக கூடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

75 கோடி ஷேர்: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெளியான படங்களில் விஜய்யின் கோட் திரைப்படம் 100 கோடி ரூபாய் ஷேர் பெற்ற நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 75 கோடி ரூபாய் வரை ஷேர் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்தின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா, தனுஷின் ராயன் உள்ளிட்ட படங்கள் செய்ய முடியாத சாதனையை அமரன் திரைப்படம் செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் சம்பளம்: நடிகர் விஜய் தமிழ்நாட்டில் 100 கோடி ஷேர் செய்யும் போதே 275 கோடி ரூபாய் என படத்தின் மொத்த வசூலில் பாதி சம்பளமாக வாங்கி வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்கு வாங்கியது போல அடுத்த படத்தில் பர்சன்டேஜ் அடிப்படையில் சம்பளம் வாங்கப் போவதாகவும் 70 முதல் 75 கோடி ரூபாயாக அவரது சம்பளம் உயர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தபடி ஜெயம் ரவிக்கும் அதிக சம்பளம் வழங்கப்பட உள்ளதாக கூறுகின்றனர்.

எஸ்கே 25 படத்தின் பட்ஜெட்: சூர்யாவை வைத்து புறநானூறு எனும் தலைப்பில் சுதா கொங்கரா படம் இயக்க நினைத்த நிலையில், சூர்யா வெளியேறிவிட்டார். கங்குவா திரைப்படம் 150 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாத நிலையில், தற்போது எஸ்கே 25 படத்தின் பட்ஜெட் மட்டுமே 180 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அமரன் படத்தின் மூலம் 300 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை சிவகார்த்திகேயன் நிகழ்த்திய நிலையில், இந்த படம் 400 முதல் 500 கோடி வரை வசூல் ஈட்டும் என்கிற கணிப்புடன் கூடுதல் பட்ஜெட்டில் படத்தை பிரம்மாண்டமாக சுதா கொங்கரா உருவாக்கப்போகிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X