20 வருஷ நட்பு.. மாதவனுக்கு வகை வகையா விருந்து வச்ச சுதா கொங்கரா.. அந்த அல்போன்ஸா மாம்பழம்!

சென்னை: சுதா கொங்கரா பரிமாற விரல் சூப்பி மாதவன் ருசித்து சாப்பிடுவதை பார்த்தால் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டாலும் மீண்டும் பசித்து விடும் அந்த அளவுக்கு சூப்பரான விருந்து கொடுத்து வெறியேற்றி உள்ளார் சூரரைப் போற்று இயக்குநர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் மாதவன் உடன் லன்ச் சாப்பிடும் போட்டோக்களை இயக்குநர் சுதா கொங்கரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இறுதிச்சுற்று 2 படத்தை சீக்கிரம் பண்ணுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Sudha Kongara gives a super feast for Madhavan and shares mouth drooling pictures

மாதவனுக்கு உணவு பரிமாறிய சுதா கொங்கரா: இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா மாதவன் உடன் தனக்கு 20 வருட நட்பு என பதிவிட்டு வகை வகையான சைவ உணவுகளை சமைத்து பரிமாறி உள்ள காட்சிகளை போட்டோக்களாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸிங் கோச்சாக நடித்து மிரட்டி இருப்பார் மாதவன். நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த படம் மாதவனுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. அந்த படத்தில் நடித்த ரித்திகா சிங்கின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Sudha Kongara gives a super feast for Madhavan and shares mouth drooling pictures

வகை வகையான டிஷ்: ஏப்ரல் 14ம் தேதியான நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், வகை வகையான சைவ உணவுகளுடன் நடிகர் மாதவனுக்கு உணவுப் பரிமாறி அசத்தி விட்டார் இயக்குநர் சுதா கொங்கரா. வங்கை அன்னம், வடியல், பொடி, சாம்பார், வத்தக் குழம்பு, தயிர் சாதம், பெண்டலம் பச்சடி என பல வகையான உணவு வகைகளை சமைத்துப் போட்டு பரிமாறி அசத்தி விட்டார் சுதா கொங்கரா.

அல்போன்ஸா மாம்பழம்: மேலும், சிறப்பு டிஷ் ஆக ரத்னகிரியை சேர்ந்த அல்போன்ஸா மாம்பழமும் டெசர்ட்டாக வழங்கப்பட்டது என சுதா கொங்கரா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மாதவன் அமர்ந்து செம ஹேப்பியாக உணவுகளை உண்ணும் அழகே தனி அழகு என ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

விரல் சூப்பி சாப்பிடும் மாதவன்: சுதா கொங்கரா வைத்த விருந்தை பார்த்து சந்தோஷத்தில் குழந்தையை போல விரல் சூப்பி ரசித்து ருசித்து சாப்பிடும் செம க்யூட்டான போட்டோவையும் இயக்குநர் சுதா கொங்கரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய ஏகப்பட்ட பிரபலங்களே எங்களுக்கு எல்லாம் சோறு கிடையாதா? என கேட்டு வருகின்றனர்.

Sudha Kongara gives a super feast for Madhavan and shares mouth drooling pictures

இறுதிச்சுற்று 2 வேண்டும்: மாதவன் உடன் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா அதன் பின்னர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். இந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், மீண்டும் மாதவன் உடன் இணைந்து இறுதிச்சுற்று 2 படத்தை கொடுங்க சுதா கொங்கரா என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சூர்யாவுடன் ஒரு லன்ச்: இந்த புகைப்படங்களை பார்த்த சூர்யா ரசிகர்கள், இதே போல சூர்யாவுக்கும் ஒரு லஞ்ச் கொடுங்க என்றும் கேட்டு வருகின்றனர். சமீபத்தில், புது கார் வாங்கியதுமே சூர்யாவை தான் டிரைவ் பண்ண வைத்திருந்தார் சுதா கொங்கரா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X