ஒரே ஒரு காட்சிக்கு 30 டேக் எடுத்த பாலா... மேக்கிங் பார்த்து வியந்த சுதா கொங்கரா!
சென்னை: இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிம்புவின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்க தயாராகி கொண்டு உள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா
சில படங்களிலேயே இந்திய அளவில் அனைவரும் கவனிக்க கூடிய முக்கிய இயக்குனராக மாறியுள்ளார்
இந்த நிலையில் இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் ஒரே ஒரு காட்சியை எடுக்க 30 டேக் எடுத்ததாக பிரமிப்புடன் பகிர்ந்துள்ளார்

மாதவனை முரட்டுத்தனமான
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா இப்போது தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளார் முதல் படம் துரோகி மிகப்பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் மாதவனை முரட்டுத்தனமான குத்துச்சண்டை பயிற்சியாளராக காட்டி இருப்பார்.

சூரரைப்போற்று ஆஸ்கர் விருதுக்கு
இறுதிச்சுற்று மாபெரும் வெற்றி பெற்று சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது இந்த நிலையில் அடுத்ததாக சூரரைப் போற்று மேலும் ஒரு படி மேலே போய் ஓடிடி தளத்திலும் சக்கை போடு போட்டது. சூர்யாவின் நடிப்பில் வெளியான இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்த சூரரைப்போற்று ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது.

பாலாவின் மேக்கிங் குறித்து
சூரரைப் போற்று இப்பொழுது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தி ரசிகர்களுக்காக ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாகி வரும் இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுதா கொங்கரா பாலாவின் மேக்கிங் குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

கிணற்று காட்சியில்
ராவான கதைகளை உண்மை தன்மை மாறாமல் இயக்கி வரும் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் பெரும்பாலும் விருதுகளை பஞ்சமில்லாமல் குவித்து வருகிறது இந்த நிலையில் அதர்வா முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த பரதேசி படத்தை பாலா இயக்கியிருந்தார். கொத்தடிமைகளை பற்றி பேசும் முக்கிய படமாக பரதேசி வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஒரு காட்சியில் கிணற்றில் இருந்து ஹீரோ கயிற்றின் மூலம் ஏறுவது போல ஷாட் வைத்திருப்பார்கள்.

20 முதல் 30 டேக்
அந்த ஒரு காட்சியை எடுப்பதற்காக பாலா 20 முதல் 30 டேக் வைத்துள்ளார். இதை பார்த்த சுதா கொங்கரா நல்லா எடுத்த காட்சியை எதற்காக மீண்டும் மீண்டும் பாலா டேக் எடுக்கிறார் என்று யோசித்திருக்கிறார். பின்புதான் தெரிந்தது அவர் கயிற்றில் ஏறுவதிலும் பர்ஃபக்ஷன் பார்த்தது அப்போதுதான் எனக்கு புரிந்தது. பரதேசி படப்பிடிப்பில் நடந்த இந்த சுவாரஸ்ய தகவலை சுதா கொங்கரா வியந்து பாராட்டி பகிர்ந்துள்ளார்


Click it and Unblock the Notifications











