ட்விட்டரில் இணைந்தார் இயக்குநர் சுதா கொங்கரா.. ஏகே 63 பட அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்!

சென்னை: இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய சினிமாவின் தலை சிறந்த இயக்குநர் பட்டியலில் இடம்பிடித்த சுதா கொங்கரா ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

ப்ளூ டிக் உடன் இதுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என சுதா கொங்கரா தற்போது போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 41வது படத்தில் சுதா கொங்கரா முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

2 தரமான சம்பவங்கள்

2 தரமான சம்பவங்கள்

மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலமே தான் எப்படிப்பட்ட இயக்குநர் என்பதை இந்திய சினிமாவுக்கு நிரூபித்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. அந்த படத்தை தொடர்ந்து சூர்யாவை வைத்து அவர் இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் இன்னொரு சம்பவத்தை இந்திய சினிமாவில் செய்தது.

ஆஸ்கர் வரை

ஆஸ்கர் வரை

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறியது. ஆனால், இறுதிச்சுற்றில் அந்த படம் நாமினேட் ஆகவில்லை என்றாலும், உலக நாடுகளின் பல படங்களுடன் போட்டி போட்டு முன்னேறியதே பாராட்டுதலுக்குரிய விஷயம் என ரசிகர்களால் போற்றப்பட்டது.

அடுத்து யாருடன்

அடுத்து யாருடன்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என இரு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. மேலும், சூர்யா 41, வாடிவாசல், சிறுத்தை சிவா உடன் ஒரு படம் என 3 படங்கள் லைன் அப்பில் உள்ளன. ஆனால், இயக்குநர் சுதா கொங்கரா அடுத்து யாருடன் என்ன படம் பண்ணப் போகிறார் என்கிற எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கடைசியாக நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜியில் தங்கம் குறும்படத்தை இயக்கி இருந்தார்.

ட்விட்டரில் இணைந்த சுதா கொங்கரா

ட்விட்டரில் இணைந்த சுதா கொங்கரா

இயக்குநர் சுதா கொங்கராவின் ட்விட்டர் ஐடி என ஏகப்பட்ட ஃபேக் ஐடிக்களில் இருந்து சில ட்வீட்கள் வந்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது தான் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளேன். இதுதான் எனது ட்விட்டர் ஐடி என தற்போது ட்வீட் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். சீக்கிரமே சுதா கொங்கராவிடம் இருந்து ஏகப்பட்ட அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏகே 63 அப்டேட்

ஏகே 63 அப்டேட்

விஜய்யுடன் படம் பண்ண போகிறார், சிம்புவுடன் படம் பண்ண போகிறார், அஜித்துடன் ஏகே 63 கன்ஃபார்ம் என ஏகப்பட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சுதா கொங்கரா ட்விட்டர் உலகிற்கு வருகை தந்துள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் அவரிடம் ஏகே 63 பட அப்டேட்டை கேட்க தொடங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X