100 கோடி போஸ்டர் எல்லாம் கேம் சேஞ்சர் கணக்கா?.. சுதா கொங்கராவின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?
சென்னை: துரோகி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இயக்குநர் சுதா கொங்கரா. மாதவன், ரித்திகா சிங்கை வைத்து அவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக மாறியது. பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்தது.
சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக கொரோனா காலத்தில் வெளியானாலும் ஒட்டுமொத்தமாக 5 தேசிய விருதுகளை அந்த படம் அள்ளியது.

மீண்டும் சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்க நினைத்த புறநானூறு திரைப்படம் சரியாக கைகூடாத நிலையில், சிவகார்த்திகேயன், அதர்வா முரளி, ஸ்ரீலீலாவை வைத்து அதே கதையை பராசக்தி படமாக எடுத்து இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட்டார்.
100 கோடி போஸ்டர்: இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே சூர்யாவின் கருப்பு திரைப்படம் 340 கோடிக்கு வசூல் செய்து அசத்தியது. அந்த படத்துக்கு முன்னதாக இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே 100 கோடி போஸ்டர் பேனரை வெளியிட்டது ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் வெளியான பராசக்தி படம் தான். 140 கோடி பட்ஜெட்டில் படம் உருவானது என்றும் சுமார் 40 கோடி அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் அடிவாங்கினாலும், ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமங்களின் மூலம் படம் தப்பித்து விட்டது என்றே படக்குழு ரிலீஸ் சமயத்தில் கூறியது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
8.39 கோடி பாக்கி: தீ பரவட்டும் என பராசக்தி படத்தை இயக்கிய சுதா கொங்கரா தற்போது கேஸ் பரவட்டும் என்கிற ரீதியில் படம் வெளியாகி சுமார் 5 மாதங்கள் ஆன நிலையிலும், தனக்கான சம்பள பாக்கியான 8.39 கோடி ரூபாய் சம்பளத்தை டான் பிக்சர்ஸ் தரவில்லை என வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள இதயம் முரளி படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தையும் தனக்கு செட்டில் செய்யாமல் ரிலீஸ் செய்யக் கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சுதா கொங்கரா சம்பளம் எத்தனை கோடி?: பராசக்தி படத்துக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்கின்றனர். சுதா கொங்கராவுக்கு சம்பள பாக்கியே 8.39 கோடி ரூபாய் என்றால் மொத்த சம்பளம் எத்தனை கோடி என்கிற கேள்வி எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 12 முதல் 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், பராசக்தி படத்திற்கு பிறகு இன்னமும் தனது அடுத்த படத்தை சுதா கொங்கரா ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications