பராசக்தி பொங்கல்.. இந்த படத்தோட வெற்றிக்கு காரணமே இதுதான்.. சிறுமியை கை காட்டி சுதா கொங்கரா குஷி!
சென்னை: கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான புதிய படங்கள் சொதப்பிய நிலையில், இந்த ஆண்டு ஜன நாயகன் மற்றும் பராசக்தி தமிழ் சினிமாவை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் இன்னமும் கிடைக்காத நிலையில், பொங்கலுக்கு சோலோ ரிலீஸாக பராசக்தி வெளியான நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வசூலை வாரி விடும் என தெரிகிறது.
மேலும், அடுத்த வாரம் பொங்கல் விடுமுறை வசூலையும் பராசக்தி அள்ளிவிடும். ஆனால், பராசக்தி படத்துக்கு கடைசி நேரத்தில் போட்டியாக கார்த்தியின் வா வாத்தியார், மோகன் ஜி இயக்கத்தில் அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள திரெளபதி 2 மற்றும் தளபதி விஜய்யின் தெறி ரீ ரிலீஸ் படங்கள் அடுத்த வாரம் வெளியாக உள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு எத்தனை படங்கள் வெளியானாலும் மக்கள் தியேட்டருக்குச் சென்று பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மக்களை ஏமாற்றாமல் நல்ல சினிமாவாக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், பராசக்தி வெற்றிக்கு காரணமே இதுதான் என சுதா கொங்கரா சந்தோஷத்தில் பேசியுள்ளார்.
தியேட்டரில் படம் பார்த்த பராசக்தி டீம்: சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், கெனிஷா, சுதா கொங்கரா, ஷாலினி அஜித் என ஏகப்பட்ட பிரபலங்கள் தியேட்டருக்குச் சென்று பராசக்தி படத்தை பார்த்து கொண்டாடியுள்ளனர். சென்சார் குறித்து சிவகார்த்திகேயன் பேசியது, ரவி மோகன் தான் ஹீரோ அவரால் தான் படம் ஓடும் என கெனிஷா பேசியது, ஜன நாயகன் பற்றி கேட்டதும் சைலண்ட்டாக ஸ்ரீலீலா காரில் சென்றது போன்ற பல காட்சிகள் இன்று வைரலாகின.

இதுதான் இந்த படத்தோட வெற்றி: தியேட்டருக்கு படத்தை பார்க்க வந்த சிறுமி ஒருவர், அந்த அந்த மாநில மக்கள் அந்த அந்த மாநில மொழிகளை பேசுவதே முக்கியமானது என பராசக்தி படம் வலியுறுத்துகிறது என பேசியதை மேற்கோள் காட்டிய சுதா கொங்கரா இதுதான் இந்த படத்தின் வெற்றி என பெருமிதத்துடன் பேசினார். மேலும், படத்தை பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
என் படம் வந்து 10 வருஷம் ஆகுது: தியேட்டரில் என்னோட படம் ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆகுது சார். எனக்கு இதுக்கு மேல என்ன வேண்டும், ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறேன் என சுதா கொங்கரா பேசினார். சூரரைப் போற்று ஓடிடியில் வெளியான நிலையில், இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு தமிழில் அவர் இயக்கிய பராசக்தி தான் தியேட்டர் ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications