சுதா கொங்கரா இயக்கத்தில் துவங்கியது சூரரை போற்று இந்தி ரீமேக்... என்ன இவர் தயாரிக்கிறாரா!

மும்பை :நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படம் சிம்ப்ளிஃப்லி டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது. அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கவுள்ளார்.

சூரரைப் போற்று படம்

சூரரைப் போற்று படம்

நடிகர் சூர்யா, அபர்ணா முரளி, கருணாஸ், ஊர்வசி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். சிம்ப்ளிஃப்லி டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.

சிறப்பான படம்

சிறப்பான படம்

நேரடியாக ஓடிடியில் வெளியானாலும் சூர்யாவின் மகுடத்திற்கு மற்றொரு சிறப்பை சேர்க்கும் படமாக சூரரைப் போற்று அமைந்தது. ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய கேரக்டரை உணர்ந்து சூர்யா நடித்திருந்தார். அவருக்கு சிறப்பான படமாக இந்தப் படம் அமைந்தது.

மிரட்டலான திரைக்கதை

மிரட்டலான திரைக்கதை

திரைக்கதையிலும் இந்தப் படம் மிரட்டலாக அமைந்தது. இறுதிச்சுற்றுப் படத்திற்கு பிறகு இந்தப் படத்தை சிறப்பாக இயக்கியிருந்தார் சுதா கொங்கரா. இந்நிலையில் இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது. இதற்கான பூஜை நேற்றைய தினம் மும்பையில் போடப்பட்டது.

பூஜையில் பங்கேற்ற சூர்யா

பூஜையில் பங்கேற்ற சூர்யா

பாலாவின் சூர்யா41 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றிருந்த சூர்யா திடீரென நேற்றைய தினம் திருவனந்தபுரத்திலிருந்து மும்பைக்கு பயணமானார். இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தின் பூஜையில் பங்கேற்கவே நேற்றைய தினம் அவர் மும்பை சென்றது உறுதியாகியுள்ளது.

சூர்யா தயாரிப்பு

சூர்யா தயாரிப்பு

சுதா கொங்கரா இயக்கவுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்ப்பில் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பூஜை வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரீமேக் படங்களில் அக்ஷய் ஆர்வம்

ரீமேக் படங்களில் அக்ஷய் ஆர்வம்

படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாகியுள்ளார் ராதிகா மதன். சமீபகாலங்களில் தமிழ் ரீமேக் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் அக்ஷய் குமார். சமீபத்தில் தமிழில் வெற்றி பெற்ற ஜிகிர்தண்டா படத்தின் ரீமேக்கில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று ரீமேக்கில் அவர் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X