அமீருக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சனையுமில்லை.. சுதா கொங்கரா போட்ட திடீர் போஸ்ட்.. என்ன ஆச்சு?

சென்னை: அமீர் மற்றும் ஞானவேல் ராஜாவில் திடீரென சுதா கொங்கரா தலை உருள ஆரம்பித்த நிலையில், அவர் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவின் புறநானூறு படத்தை இயக்க உள்ளார்.

Sudha Kongara sudden tweet and clarify no issues between her and Ameer

இந்நிலையில், இறுதிச்சுற்று படத்துக்கு தனக்கு இன்ஸ்பிரேஷனே அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற முத்தழகு கதாபாத்திரம் தான் என பதிவிட்டுள்ளார்.

சிக்கிய சுதா கொங்கரா: அமீரின் ராம் படம் நல்லாவே இல்லை என சுதா கொங்கரா விமர்சித்ததாக ஞானவேல் ராஜா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படத்தின் கதையே அவருடைய கதை இல்லை என்றும் துளசி எனும் பெண் பாக்ஸரின் கதையை அவரிடம் இருந்து கேட்டு, அதற்கு எந்தவொரு ராயல்டியும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என அந்த பெண் பேசிய வீடியோவை ஷேர் செய்து சுதா கொங்கராவையும் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சுதா கொங்கரா ட்வீட்: இந்நிலையில், தனது தலையும் இந்த விவகாரத்தில் உருள தொடங்கிய நிலையில், உடனடியாக பதறி அடித்துக் கொண்டு சுதா கொங்கரா தற்போது அமீருக்கும் தனக்கும் பிரச்சனை இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளார். அவர் போட்ட பதிவில், ”பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்... நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்... என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று.

ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி...” என அமீர் ரசிகர்கள் மத்தியில் சிக்காமல் இருக்க ஒரே போடாக போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X