சூர்யா படத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டாரா சுதா கொங்கரா?.. அந்த விவகாரம் தான் காரணமா?

சென்னை: சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து, சூர்யாவை வைத்து மீண்டும் சுதா கொங்கரா புறநானூறு எனும் டைட்டிலில் படம் இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்தப்படம் தயாராக மேலும், காலதாமதம் ஆகும் என அறிவித்த சூர்யா அதிரடியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை வென்றது. அந்த படம் தியேட்டர்களில் வெளியாகாமல் கொரோனா காலம் என்பதால் வெறும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியானது.

suriya sudha kongara akshay kumar

சூரரைப் போற்று திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. அந்த படத்தின் இந்தி ரீமேக்கையும் சூர்யா, சுதா தொந்தரவை வைத்து தயாரித்து இருந்தார். அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ள அந்த படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிறது.

ஓடிடி நாயகன்: சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், சூர்யாவை நெட்டிசன்கள் ஓடிடி நாயகன் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர். கங்குவா திரைப்படம் நிச்சயம் அந்தப் பெயரை உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாக இந்தி படமான சர்ஃபிரா படத்தில் நடிகர் சூர்யா அக்‌ஷய் குமாருடன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அந்த படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.

கண்டுக்காத சுதா கொங்கரா?: சர்ஃபிரா படம் இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அக்‌ஷய் குமார் படத்துக்கு நாடு முழுவதும் பெரியளவிலான புரமோஷன்களை சூர்யாவின் 2டி நிறுவனம் செய்யவில்லை. அதே போல சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டியில், மவுத் டாக் மூலமாக அந்த படம் வெற்றி பெறும் என்றார்.

அக்ஷய் குமாருக்கு கிடைக்குமா?: படே மியான் சோட்டே மியான் படத்துக்கு பெரிய அளவில் புரமோஷன் செய்த அக்ஷய் குமார் சர்ஃபிரா படத்துக்கு புரமோஷனே செய்யவில்லையே என்றும் அட்லீஸ்ட் கோலிவுட்டில் சூர்யாவாவது அந்த படத்தை புரமோட் செய்திருக்கலாமே என்கிற கேள்விகள் எழுகின்றன. மேலும், இந்த படமாவது அக்‌ஷய் குமாருக்கு வெற்றி படமாக அமையுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளன.

டவுட்டு தான்: இந்தியன் 2 அலையில் சூர்யா தயாரித்துள்ள அக்‌ஷய் குமாரின் சர்ஃபிரா திரைப்படம் காணாமல் போய் விடும் என்கின்றனர். படக்குழுவுக்கே படத்தின் மீது நம்பிக்கை இல்லையா? சூர்யா மற்றும் சுதா கொங்கரா மோதல் தான் இந்த படத்தை பெரிதாக கண்டுக் கொள்ளாததற்கு காரணமா? என்றும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்த பட பிரச்சனை காரணமாகத்தான் சூர்யா சுதா கொங்கரா படத்தில் இருந்து வெளியேறி விட்டாரா? என்றும் பலவிதமான கேள்விகள் கோலிவுட்டில் வெடித்துள்ளன. சர்ஃபிரா டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தியில் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்கரா அடுத்து தமிழில் எந்த ஹீரோவை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்றும் சிம்பு, துருவ் விக்ரம், சிவகார்த்திகேயன் என சில நடிகர்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X