விடுதலை ஷூட்டிங் ஸ்பாட் விசிட்.. பெருமிதப்பட்ட சூரரைப் போற்று இயக்குநர்

சென்னை: விடுதலை படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கை முன்னிட்டு இயக்குநர் சுதா கொங்கரா படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.

மணிரத்னம், பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு துரோகி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. முதல் படம் ஓரளவு வரவேற்பை கொடுத்தது. இதனையடுத்து இறுதிச்சுற்று படத்தை இயக்கினார் சுதா கொங்கரா.

சுதா கொங்கராவின் இறுதிச்சுற்று

சுதா கொங்கராவின் இறுதிச்சுற்று

மாதவனை வைத்து தனது இரண்டாவது படமாக இறுதிச்சுற்று படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. அதில் மாதவனுடன் ரித்திகா சிங், நாசர், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பாக்ஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சூப்பர் ஹிட்டானது. மேலும் அந்தப் படத்தில் நடித்ததற்காக ரித்திகா சிங் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று அசத்தினார். இந்தப் படத்தை அடுத்து கவனிக்கப்படக்கூடிய இயக்குநர்களில் ஒருவரானார் சுதா கொங்கரா.

சூர்யாவை வைத்து சூரரைப் போற்று

சூர்யாவை வைத்து சூரரைப் போற்று

இதனையடுத்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட சூரரைப் போற்று நேரடியாக ஓடிடியில் வெளியானது. மெகா ஹிட்டான இந்தப் படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ் தேசிய விருதை பெற்றனர். மேலும், சிறந்த படம், சிறந்த திரைக்கதை என்ற பிரிவின் கீழும் சூரரைப் போற்று தேசிய விருதை பெற்றது.

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்

இப்படி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காகிவருகிறது. இதில் ஹீரோவாக அக்‌ஷய் குமார் நடிக்க சுதா கொங்கராவே இயக்குகிறார்; ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இச்சூழலில் படப்பிடிப்பின்போது சுதா கொங்கராவுக்கு அடிபட்டது. இதுகுறித்து அவர் கூறும்போது, "சிறந்த வலி சிறந்த எரிச்சலூட்டும். ஒரு மாத இடைவெளி. ஆனால் நான் எதிர்பார்த்த இடைவேளை இல்லை இது" என குறிப்பிட்டிருந்தார்.

விடுதலை ஷூட்டிங் ஸ்பாட்டில் சுதா கொங்கரா

விடுதலை ஷூட்டிங் ஸ்பாட்டில் சுதா கொங்கரா

இந்நிலையில் விடுதலை படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் இன்று நடைபெற்றது. இதனையொட்டி சுதா கொங்கரா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர், "என் இருண்ட இடைவெளியில் இருந்து விடுதலை. என் நண்பனின் கடைசி நாள் படப்பிடிப்பில்" என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை


அசுரன் படத்துக்கு பிறகு வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டாகியுள்ளது. விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இதன் முதல் பாகமானது மார்ச் 31ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X